நடிகர் விஜய் தனது நெருங்கிய உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. லீலாபேலஸில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் ஒரு குழந்தையுடன் எடுத்துக் கொண்ட படம் மற்றும் கைகட்டி அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த விஜய் வெள்ளை நிற சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்து அசத்தினார்.