இயக்குநர் ஏ.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் தலைவி. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆர் ஆகவும் நடித்து வருகின்றனர்.

இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் லுக் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தலைவி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பாடலுக்கு நடித்துள்ள அரவிந்த் சாமி எம்.ஜி.ஆரை அப்படியே உரித்தது போல் உள்ளார்.