இன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை. Dont Worry… Be Sandy! இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி! ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து […]

வனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட்! முயற்சி = முகின்! ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று  முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன். தர்ஷன், […]

இன்னொரு சானலில் ‘பிகில்’ ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பாக, இன்றைக்கு பிக் பாஸுக்கான ஆடியன்ஸ் கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தார்கள். சமூக ஊடகங்களிலும் அதன் பிரதிபலிப்பு நன்றாகவே தெரிந்தது. எப்ப வந்தாலும் பிகிலடிப்போம்ல என்று பிக்பாஸ் சேரன் எவிக்‌ஷன்… லாஸ்லியாவின் எமோஷன் என்று கலந்து கட்டிய எபிசோடாக இந்த வீக்கெண்டின் எபிசோட் முடிந்தது. பிகில் கிளப்பும் பிக்பாஸ்! 91ம் நாள். 4.15. லாஸ்லியா கேமரா முன் எதையோ சொல்லியிருப்பார் போல. கன்ஃபெஷன் ரூமுக்குள் […]

இறுதி டாஸ்க் நாள் இன்று. கவினுக்கும் சாண்டிக்கும் நடந்த நட்பு மோதலில் சாண்டி உடைந்துபோய் ‘வீட்டுக்குப் போறேன்’ என்றதும் குருநாதர் அவரை சமாதானப்படுத்தியதும் இன்றைக்கு நடந்தது. பத்த வெச்சுட்டியே பரட்ட! பிக் பாஸ் வீட்டில் 88-ம் நாள். அதிகாலை 6.35ன் நடப்பதோடு ஆரம்பித்தது இன்றைய ஒளிபரப்பு. கவினும் லாஸ்லியாவும் தங்கள் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். தர்ஷன், முகின் சுற்றி நடந்துகொண்டிருக்க ‘அவங்க பாக்காதப்ப பட்னு ஒடைச்சிருங்க. அவ்ளதான்’ என்று […]

நேற்றின் தொடர்ச்சியாக தங்கமுட்டையை அடைகாக்கும் டாஸ்க் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அதில் சாண்டிக்கும் கவினுக்கும் ஒரு சிறு முட்டல் வேறு நடந்தது! தங்கமுட்டைக்கு இடைவேளை! ஷெரின் கொஞ்சம் கொஞ்சமாய்க் கண் அயர்ந்தார். சேரன் ஷெரினின் தங்க முட்டையைக் கொண்டுபோய் ஒளித்துவைத்துவிட்டு வந்தார். முட்டை எப்படி உடையும் என்று சாம்பிளுக்கு சாண்டியின் முட்டையைக் கீழே போட்டுப் பார்த்தார்கள். டமால் என்று அது உடைய, அப்பாடா என்று அடுத்த ஷெரின் முட்டையை எடுத்துவந்து உடைத்தார்கள். […]

சாண்டி ஒரு பாட்டி கதை சொன்னார். அதுபோக இன்றைய ஹைலைட்டாக அமைந்தவை டாஸ்குகள்தான். அதிலும் கடைசியாகக் கொடுத்து இன்னும் முடியாமல் இருக்கும் டாஸ்க்… வீட்டினரின் பொறுமையைச் சோதிக்கும் டாஸ்காக இருக்கிறது. சாண்டி மாஸ்டர் பீஸ் கதை இன்னும் கொஞ்சநாள்தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கப்போகிறோம் என்ற விஷயம் வீட்டில் இருப்பவர்களை இருவேறு உணர்ச்சிகளுக்கு ஆளாக்கியிருக்கும். ஒன்று “ஹையா கேம் முடிஞ்சுருச்சு!”, இன்னொன்று “இந்த பிக் பாஸ் வீட்டை விட்டுப் போகப் […]

86-ம் நாள். Ticket To Finale டாஸ்குகளின் தொடர்ச்சி. இதில் ஒரு டாஸ்கில் கவின் ஆச்சர்யப்படுத்தி இரண்டாமிடம் பெற்றதுதான் இன்றைக்கு ஹைலைட்டாக அமைந்தது. அண்டு த வின்னர் ஈஸ்… ஷெரினை வம்பிழுத்துக்கொண்டிருந்தார் கவின். கொஞ்சம் தள்ளி அமர்ந்து சிரித்தபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் லாஸ்லியா. கார்டன் ஏரியாவில் ஒரு லீடர் போர்டு இருந்தது. போட்டியில் வெற்றிபெற்றால் யார் எப்படி எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் எனப் பேசுமாறு ஆக்டிவிட்டி கொடுத்தார் பிக் பாஸ். […]

வனிதா வெளியேறியதுதான் இன்றைய மெகா ஹைலைட். அதைத்தவிர, உள்ளே போகாத சில உறவினர்கள் மேடையிலும் வீடியோவிலும் வந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார்கள். உஷார் ஆகிக்கோ முகினு… வெள்ளை பேண்ட், கறுப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ, கறுப்பு டிஷர்ட் என்று கலக்கல் காஸ்ட்யூமில் வந்தார் கமல். குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னையைப் பேசினார் கமல். தேர்வு முறையில் அரசு கடுமையான மாற்றம் செய்வதால், சிறுவயதில் படிப்பு பாதிக்கப்பட்டு குழந்தைகளாக இருக்கும்போதே வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்பதைப் பதிவு […]

வீட்டுக்குள் சென்ற உறவுகள் அரங்கில் அமர்ந்திருக்க, கமல் இரு தரப்பிலும் பேசியதுதான் இன்றைக்கு ஒளிபரப்பானது. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அவர் சொல்லிவிட்டு இரு தரப்பையும் அழகாக பேலன்ஸ் செய்தார். ரகசிய அறையும் பகிரங்க அறையும் பார்வையாளர்களோடு அமர்ந்திருந்தார் கமல். இந்தப் பக்கம் லாஸ்லியா அம்மா; அந்தப் பக்கம் ஷெரினின் அம்மா. “பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கற போட்டியாளர்களுக்கு புகழும் விமர்சனமும் வெறுப்பும் அன்பும் உடனுக்குடன் போய்ச்சேராது; புரியாது. அதை […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!