ஒன் ஃபிலிம் ஒண்டர் என்பார்களே அது ரேஷ்மாவுக்கு அப்படியே பொறுந்தும். ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸானவர் ரேஷ்மா. ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், ஆங்கர் என ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட முகங்கள். வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

  நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, ‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கும், தொலைக்காட்சி நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு வனிதா, தொழிலதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு […]

பிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நாளிலேயே குஷியாகினார்கள் சமூக வலைதள வாசிகள். ‘துள்ளுவதோ இளமை’ பூஜாவை இன்னும் கண்களில் சுமந்து திரியும் 90’s கிட்ஸ் அவர் வந்திறங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து ‘சார் ஷெரின் சார்..’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். துருவா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்தவர் ஷெரீன். தனுஷூடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமைதான் அவருக்கு தமிழில் முதல் படம். கோவில்பட்டி […]

பிக்பாஸ் சீசன் 1 & 2 வின் இறுதி நாளில் பிக்பாஸையே கலாய்த்து டான்ஸ் ஆடிய சாண்டி, இந்த சீசனில் போட்டியாளர். முதல் நாளில் தன்னைத்தானே கலாய்த்து நடனமாடி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் சந்தோஷாக அறிமுகமானவர் சாண்டியாக மாறி வெளியே வந்தார். அப்படித் தன் பயணத்தை தொடங்கியவர் ‘காலா’வில் ரஜினிக்கு டான்ஸ் சொல்லித் தரும் நிலைக்கு வளர்ந்தார். ‘சாண்டி டான்ஸ் ஸ்டுடியோ’ என்ற […]

தனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் சந்தானத்தால் ‘ஜாங்கிரி’ என்று வர்ணிக்கப்பட்டவர் மதுமிதா. இன்று அவருடைய விக்கிபீடியா பக்கமே ஜாங்கிரி மதுமிதா என்று தான் இருக்கிறது. சந்தானத்தைப் போலவே லொள்ளுசபாவில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் களமிறங்கியவர்தான் மதுமிதா. அதற்கு முன்பே ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நாடகத்திலும் நடித்திருக்கிறார். இவருக்கும் உதவி இயக்குநர் மோஸஸ் ஜோயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடந்தது. […]

‘ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…’ என்று சைக்கிளை மிதித்துக்கொண்டே பழைய காதலிகளைத் தேடிக் கிளம்பிய சேரன், இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரீ கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சேரனை புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சேரன் யார் என்பதை வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்கள் சொல்லும். முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’வில் தொடங்கி சமீபத்தில் அவர் இயக்கிய வெளியான ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ வரை தனக்கே […]

“பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஜினிகாந்த் படம் அகற்றம்… கவின் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக அபிராமி சொன்னது…  ‘முதல்நாளே பிக் பாஸ் தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார்’ என்ற முணுமுணுப்பு ரசிகர்களிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் 16-வது விருந்தாளியாக மீரா மிதுன் என்ற மாடல் வீட்டுக்குள் சென்றார். ‘ஷோ தொடங்கிய இரண்டாவது நாளே புதிய கெஸ்ட் எதுக்கு. அதுவும் சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் புகார் வரை போன […]

செய்தி வாசிப்பாளர், சின்னதிரை நடிகை, அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளரே இவர்தான். ஃபாத்திமாவின் வருகை கடந்த சீசனின் ஆனந்த் வைத்தியநாதனை நினைவுபடுத்துவது போல் இருந்தாலும், அனந்து சேனலால் வற்புறுத்தி அழைத்து வரப்பட்டவர். ஆனால் ஃபாத்திமாவோ தன் விருப்பத்தின் பேரிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார். இருந்தாலும், ‘விஜய் தொலைக்காட்சியின் நேரடி போட்டியாளரான ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் தொடரில் […]

  மலேசிய பாடகரும், நடிகருமான முகின் ராவ் இந்த சீசனில் பங்கேற்கிறார். இந்தியாவிற்கு இதற்கும் முன் ஒருமுறை கூட முகின் ராவ் வந்ததில்லையாம். யூட்யூப் தளத்தில் இவர் எழுதி , இசையமைத்துப் பாடிய ‘ அபிநயா’ என்கிற பாடல், இதுவரையில் 80 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. முகின் ராவ் தன்னைய MGR என அடையாளப்படுத்திக்கொள்கிறார் (ஆத்தீ) . யூ டியூப் இசை வெறியர்கள் மத்தியில் முகின் ராவ் கொஞ்சம் அதிகமாகவே […]

தமிழ் சினிமாவில் எப்படியேனும் சாதித்துவிடவேண்டும் என்கிற நம்பிக்கையில் இலங்கையிலிருந்து கோலிவுட் கதவுகளைத் திறக்க வந்திருக்கிறார். பல்வேறு ஆடிசன்களுக்கு சென்ற தர்ஷன், ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசனில், இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கீஸ் என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் தர்ஷன்.

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!