‘டோட்டல் டேமேஜ்’ வனிதா, ‘நாட் அவுட்’ சேரன்… பரபரக்கும் பிக் பாஸ்!

4

வனிதாவை கமல் வறுத்தெடுத்ததும், சேரனுக்கு ரகசிய அறை ஒதுக்கப்பட்டதும் இன்றைய மெய்ன் பிக்சர்ஸ்!

ஒரு கேப்டனா… ஒரு கேப்டனா…

77ம் நாள். சேரன் புலம்பிக்கொண்டிருந்தார். “பிரச்னைனு பேசினா லவ்வு லவ்வு லவ்வுன்னுதான் பேச்சு. அதான் டாபிக்கு” என்று சொல்ல, தர்ஷன் “லவ்வு இல்லாட்டியும் லவ்வுன்னு சொல்றாங்களே” என்றார்.

இது வனிதா காதில் விழ, விடுவாரா பரதேவதை? “இல்லாத ஒண்ணை யாரும் கிரியேட் பண்லியே. கேமரா பாத்துட்டுத்தானே இருக்கு. ஷெரின் என்கிட்ட புலம்பினாளே!” என்று பேசினார் வனிதா.

Bigg Boss Sept 8

”இல்லம்மா ரெண்டு பேருக்கும் நீ பேசறது பிடிக்கலைன்னா அதப் பேசாம இருக்கலாமே” என்று சேரன் சொல்ல, “நான் எப்பவோ பேசறத நிறுத்தியாச்சு” என்றார். இப்ப, இந்த நிமிஷம் வரைக்கும் நீ பேசிட்டுத்தானம்மா இருக்க!

சேரன் சொன்னதுக்கு அவரையும் கத்தினார். “அப்ப அவ என்கிட்ட அழுதது என்ன? நான் முட்டாளா அவ அழுகைய தொடச்சதுக்கு? நடிச்சா விடமாட்டேன். வெளில போயும் கேட்பேன். வேலைய அவ ஒழுங்கா செய்யல. ஒரு கேப்ட்னா அதைதான் நான் கேட்டேன். அப்படித்தான் கேட்பேன்” என்று 15 நிமிடத்துக்கு பிக் பாஸ் வீடே அதிரக் கத்தினார். பிறகும் சேரன் போய் விளக்க “கேப்டனா வேல செய்யாததுக்கு கேள்வி கேட்க வேண்டியது என் கடமை, உரிமை” என்றார். “சரிதான். வேல செய்யலனு கேட்கலாம். ஆனா ‘வேல செய்யாததுக்கு இது காரணம்’னு நீ உரிமை எடுத்துகிட்டுச் சொன்னது தப்பு” என்றார் சேரன். குட் பாய்ண்ட்.

வனிதா ஷெரினை இமிடேட் செய்தார். இதை வெளியில் சென்று ஷெரின் பார்த்தால்… பாவம். வெளியில் வந்த சேரனிடம்,“காதுல ரத்தம் வர்ற மாதிரி இருக்கு” என்று தர்ஷன் சொல்ல, “கழுத்துல வர்றத பார்க்கலயா?” என்று கேட்டார் சேரன்.

Bigg Boss Sept 8

கமல் எண்ட்ரி. ஆசிரியர் தினம் பற்றிக் குறிப்பிட்டார். கல்வியின் அடுத்த நிலை குறித்து அவர் பேசியது முக்கியமானது. “கணக்குப் பாடம், மனப்பாடம் இதெல்லாம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். கல்வியின் நோக்கம் வாழ்க்கையை வாழ்வதற்கான அற வழிகளை போதிப்பதாக, சமூகத்தோடு இணைந்து வாழ (Social Engagement) பழக்குவதாக, படிக்காமல் உரையாடிப் பேசும் கல்வி முறை வரவேண்டும். வேட்டையாடுதல் பற்றி பொதுவாக கற்றுக் கொடுப்பதில்லை. காரணம் வேட்டையாடி உணவுண்ணும் சூழல் இப்போது இல்லை. நான் பெரிதும் மதிக்க்கும் எட்வர் டி போனோ (Edward de Bono) புதியதாக ஒரு கல்வித்துறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில், சிந்திப்பதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் கமல்.

வாய்ப்பிருக்கும்போதெல்லாம் புத்தகம் பற்றியும், பார்ப்பவை, கேட்பவை பற்றியும் அறிமுகப்படுத்துகிற கமலுக்குப் பாராட்டுகளும் நன்றியும்!

Bigg Boss Sept 8

வழக்கமான ‘பேபேபேபேன் பேபேபேபென் டுப்புச்சுக்கு டுப்புச்சிக்கு பிக் பாஸ்’ என்று இசையுடன் வீட்டுக்குள் போகும் கமல் இன்று இசையில்லாமல் அகம் டிவியை ஆன் செய்தார். சாண்டி படுத்திருக்க, “என்ன அனந்தசயன சாண்டி… என்ன சிந்நனை?” என்று கலாய்த்தார். அதன்பிறகு இந்த வார அழைப்பாளர் கவினிடம் “தலைவர் பதவிக்கோ, பெஸ்ட் பெர்ஃபார்மராகவோ உங்கள யாரும் சொல்லவே இல்லையே” என்று கேட்டார். எனக்கும் “ஆமாம்ல” என்று தோன்றியது. கவின் அதைப் பற்றி, தான் சிந்திக்கவில்லை. இனிமேல் யோசிப்பதாகச் சொல்லி சமாளித்தார்.

சாக்‌ஷியை மீண்டும் மேடையேற்றினார். வீட்டினரைப் பற்றி சில வார்த்தைகள் கேட்டார். “எல்லாரும் சரியான முறையில விளையாடறீங்க. எல்லாருக்கும் பொதுவா வாழ்த்துகள். கவினுக்கு மட்டும் ஒண்ணு சொல்லிக்கறேன். இந்த ஒரு Toxic Friendship-ல  Toxic Relationship-ல இருந்து சரியான நேரத்துல நான் வெளில வந்துட்டேன்னு நினைக்கறேன். தேங்க்யூ டு ஆல்” என்றார்.

Toxic என்றால் நச்சுத்தன்மை வாய்ந்த என்று பொருள்!

Bigg Boss Sept 8

கவினிடம் “ஏன் மோசமான பெர்ஃபார்மராக உங்களை நீங்களே தேர்வு செய்தீர்கள். தியாகமா” என்று கேட்டார். “இல்லை” என்று மறுத்த கவின் ஏன் தான் சரியாக விளையாடவில்லை என்று காரணக் காரியங்களோடு விளக்கினார். முகினும் தர்ஷனும் போட்டி மனப்பான்மையோடு விளையாடியதையும் எந்தக் கட்டத்திலும் அது வன்முறையாக மாறாததையும் நான் இங்கு குறிப்பிட்டது போலவே பாராட்டிக் குறிப்பிட்டார் கமல். ”போட்டின்னா சண்டை போடணும்னு சொன்னவங்களுக்கு இது ஒரு நல்ல பாடமா இருந்தது. முழங்கைய மூக்குல இடிச்சுட்டு சண்டை போட்டுத்தான் விளையாடணும்கறது இல்லை. இப்படியும் விளையாடலாம்னு காட்டினீங்க” என்று குறிப்பிட்டார்.

அடுத்து பெஸ்ட் பெர்ஃபார்மர் யாரு என்று கேட்டார். வனிதா, தர்ஷன் என்று சொல்லப்பட “நீங்களே தேர்ந்தெடுத்துக்கிட்டீங்களா” என்று கேட்டார் கமல். ஆடியன்ஸ் கைதட்டல் அடங்கவே இல்லை. ‘ஜெயிச்ச டீம்ல இருக்கற நாலுபேரும் ஒண்ணா முடிவு பண்ணினீங்களா?’ என்று கேட்க தர்ஷன் மட்டும் இல்லை என்றார். அதை கவனித்த கமல் “யாரோ இல்லைன்னாங்களே?’ எனக் கேட்க தர்ஷன் கை உயர்த்தினார். மீண்டும் கரகோஷம்.

“ஆக்சுவலா டிசைன் போட்டது ஷெரினும் வனிதாக்காவும். ஷெரின் ரொம்பவே நல்லா டிசைன் பண்ணினாங்க. சேரன் தைச்சது ஃபாஸ்டா இருந்தது. நானும் நல்லா பண்ணினேன். என்னையே சொல்லிக்கக்கூடாதுன்னு நான் ஷெரினையும் சேரனண்ணாவையும் சொன்னேன்.” என்றார் தர்ஷன்.

Bigg Boss Sept 8

ஷெரினும் அதை வழிமொழிந்தார். “சேரன் பேர் சொல்லிருக்கணும். சொல்லல. அவர்கிட்ட ஸாரி கேட்டேன். உங்களுக்காக நான் நின்னிருக்கணும்னு சொன்னேன். ஏற்கெனவே வனிதாகூட நிறைய சண்டை போட்டுட்டதால இதுக்கும் சண்டையான்னு விட்டுட்டேன்.”

வனிதா, ”நான் டிசைனிங் மட்டும் இல்லாம, பொண்ணா இருந்தாலும் மிஷின்ல துணிஞ்சு கைவிட்டு, கைகூட மிஷின்ல மாட்டிகிச்சு. பொண்ணா மூணு குழந்தைகளைப் பெத்துகிட்ட உடம்ப வெச்சுட்டு கம்ப்ளெய்ன் பண்ல, படுத்துக்கல. எதையும் காமிச்சுக்காம வேல செஞ்சுட்டே இருந்தேன். அதை எல்லாம் வெச்சுகிட்டுப் பார்த்தா நான்தான்” என்றார். பேசும்போது இதை நான் சொன்னேன்; அதை நான் சொன்னேன் என்றார்.

சில பெண்களுக்கே உரித்தான தேவைப்படும்போது ‘என்ன இருந்தாலும் நான் பொண்ணு… இருந்தாலும் பண்றேன்ல’ என்று பால்பாகுபாட்டை, தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும்… – அதுவும் குறைத்துச் சொல்லும் –  டிரிக்கை வனிதா இந்த இடத்தில் பயன்படுத்தியது… ஸாரி டு ஸே – அசிங்கமாக இருந்தது.

அடுத்தது சாண்டி அண்ட் க்ரூப் விதவிதமாக டி-ஷர்ட் போட்டுக்கொள்வதைப் பற்றி ஷெரினிடம் கேட்டார். க்ரூப்பிஸம் பண்றாங்க சார் என்றார் ஷெரின். ஒரே வீட்டில் இருந்துகொண்டு இப்படி வெளிப்படையாக ஐந்து பேர் மட்டும் டி-ஷர்ட்லாம் போட்டுக்கொண்டு அலப்பறை செய்வது நிச்சயம் க்ரூப்பிஸம்தான். பள்ளிகளிலேயே எந்தப் பாகுபாடும் இருக்கவேண்டாம் என்றுதான் ஒரே உடையணிகிற முறை இருக்கிறது. சாண்டி அதற்கு ஏதேதோ சொல்லி சமாளிக்க கமல் “எல்லாத்துக்கும் பிக்பாஸ் லோகோவோட உங்க ஃபோட்டோவப் போட்டு டி-ஷர்ட் அனுப்பறேன்” என்றார்.

Bigg Boss Sept 8

மிருகநாமகரணங்கள் பற்றிப் பேசினார். பச்சோந்தி விருதுக்காக லாஸ்லியா வருத்தப்பட்டிருக்கத் தேவையில்லை என்றார். “வெளில வந்து பார்த்தா தெரியும்” என்று ஆரம்பிக்க, வனிதா “இல்லல்ல சார்…” என்று ஆரம்பித்தார். “என்னைக் கொஞ்சம் பேசவிடுங்களேன்” என்று கெஞ்சலாகக் கிண்டலாகக் கேட்டார் கமல். மீண்டும் வனிதா என்ன ரியாக்ட் பண்ணலாம் என்று கன்ஃப்யூஸ் ஆனார். தொடர்ந்த கமல் “வெளில வந்தா அய்யய்யோ பச்சோந்தியே கொடுங்கனு பொறுக்கி எடுத்துக்கற மாதிரி ஆகிடும். வடநாட்ல நான் இந்தக் கோபத்தப் பட்டிருக்கேன். சந்தத்துக்காக “Chameleon Called Kamal” அப்டினு எழுதுவாங்க. நல்லா நடிக்கறேன்னு சொன்னா போதாதா, எதுக்கு பச்சோந்தினு சொல்றீங்கன்னு தோணும். கவலப்படாதீங்க” என்றார்.

அடுத்து “மோகன் வைத்யா வயச மதிக்க மாட்டீங்கறாங்கனு வருத்தப்பட்டார். வயசுக்கு மரியாதை இல்ல. எந்த வயசா இருந்தாலும் மதிக்கறமாதிரி…” – இந்த இடத்தில் ‘நடந்துக்கணும்’ என்று சொல்ல வந்து சட்டென்று சுதாரித்துக் கொண்டார் கமல் – நம்ம பண்ணிக்கலாம். “உங்களால முடியும். வயசச் சொன்னா இளைஞர்களுக்குக் கோபம் வரும். ரொம்ப பேசற, ஒரு தட்டித்தட்டி பார்த்துடலாம்னு தோணிரும் அவங்களுக்கு. மரியாதை எல்லாம் கேட்டு வாங்கக்கூடாது. கெடைக்கலைன்னா அப்டியே மரத்துல மாங்கா பாக்கற மாதிரி வேடிக்கை பார்த்துட்டு கம்னு இருந்துரணும். பெரியவங்களாச்சே… மரியாதை குடுக்க வேணாமா?’னு கேட்டா ‘வேணாம். என்னான்ற இப்ப?’னு கேட்டுருவாங்க” என்று மோகன் வைத்யாவுக்கு பெசல் ஐட்டத்தை வீசினார் கமல்.

Bigg Boss Sept 8

ஆனால் பெரியவங்களுக்கு மரியாதை குடுப்பது பற்றியும் இரண்டு வரி சொல்லி பேலன்ஸ் செய்தார். “பெரியவர்கள் நம்மைப் போல இருந்திருக்கிறார்கள். அவர்களாக நாம் இருந்தே, இறப்போம்” என்றார்.

வனிதாவுக்கு வழங்கப்பட்ட ‘குறுக்கு புத்தி’ கழுதைப்புலி விருது’க்கும் விசனப்படத் தேவையில்லை என்றார். ”வரியே ஒழுங்காகக் கட்டாத நாம் மிருகங்களைக் குறைச் சொல்லத் தகுதியற்றவர்கள் என்றார். “ஆனா நான் கட்றேன்’ப்பா” என்றும் சொல்லத் தவறவில்லை.
வெளியேற்றும் படலத்துக்கு வந்தார். முகின், கவின், ஷெரின் காப்பாற்றப்பட்டதாகச் சொன்னார். கவின், தான் காப்பாற்றப்பட்டதுக்கு குழப்பமான ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். கடைசியாக லாஸ்லியா, சேரன் இருவரும் இருக்க சேரன் வெளியேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அதன்பிறகு வனிதா போட்ட சீன்கள் மாஸு மரணத்துக்கே டஃப்பு தருவதாக இருந்தது. அய்யய்ய்யய்ய்யோ! “நீதிமான் நேர்மை மேன் சேரனண்ணா நீங்களே போய்ட்டீங்களா. நான் இதை எதிர்பார்க்கலன்றது வேற விஷயம். ஆனா இது எனக்குப் புரியல. மக்கள் தீர்ப்பே தப்பா இருக்கே. மக்கள் தீர்ப்பே தப்பா இருந்தா அப்பறம் இந்தப் போட்டி எதுக்கு. நியாயமா இருந்தா இருக்க முடியாது; வேல செஞ்சா இருக்க முடியாது. எங்க எல்லாரையும் அனுப்பிடுங்க. எனக்கு இது பிடிக்கல” என்று வராத கண்ணீரை வரவழைக்கச் சிரமப்பட்டார். “நீங்க இல்லன்னா நாங்க என்னண்ணா பண்ணுவோம்” என்று பாசமலர் வேஷம் போட்டார்.

Bigg Boss Sept 8

”என்னா நடிப்பு… இவ்ளோ பாசம் இருக்கறவ சேரனை பெஸ்ட் பெர்ஃபார்மர்னு சொல்ல வேண்டியதானே? ஏன் கொஞ்ச நேரம் முந்தி சேரன் லாஸ்லியால யார் போகணும்னு கேட்டப்ப லாஸ்லியா நல்ல ப்ளேயர். நல்ல டாஸ்க் பண்ணுவா. டெய்லி என்ன வேலை இருந்தாலும் அத முடிக்காம படுக்க மாட்டா”னு உங்கக்கா சொல்லல? அழ வேற செய்யறா இதுல. இவ்ளோ நடிப்ப வெச்சுகிட்டு நான் நல்லா விளையாடறேன். நான் நல்லா வேலை செய்யறேன்னு நான் நான் நான்னே பேசிகிட்டு இருக்க உங்கக்காக்கு கூசாதா ஸாரோ?” என்று கன்னாபின்னாவென்று கத்தினார் பக்கத்தூட்டு லட்சுமியக்கா. “கொஞ்சம் கம்னு இருக்கா. அது வெஷம்னு தெரியாதா என்ன? என்னை ஏன் கத்தற இப்ப! அதென்ன என் சொந்த அக்காவா?” என்று அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்று இருந்தது.

லட்சுமியக்கா என்வீட்டில் வந்து திட்டிக்கொண்டிருக்கும்போது, வனிதா ஸ்டோர் ரூமில் கத்திக்கொண்டிருந்தார். “இப்படி ஒரு வீட்ல இருக்கறது எனக்கு சத்தியமா பிடிக்கல. எல்லாமே ஃபேக்கா இருக்கு. கமல் சொன்னா, மக்கள் கைதட்டினா ஆளாளுக்கு மாறிடறாங்க. எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? கூப்டு வெச்சுக் காமெடி பண்றதுக்கா?” என்று பிக் பாஸை எகிறினார். பிக் பாஸ் என்ன சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. நானாக இருந்திருந்தால் ‘ஸ்டோர் ரூமின் இந்தப் பக்க கதவைத் திறந்து வெளில வந்துடும்மா பரதேவதை’ என்றிருப்பேன்.

Bigg Boss Sept 8
கெட் அவுட் இல்ல… நாட் அவுட்!

வெளியில் வந்த சேரன், “எனக்குக் கிடைச்ச அனுபவம் போதும். இவ்ளோ நாள்ல கோபத்தை விட்டுவிட்டேன். அதுவே பெரிய விஷயம். அனைவருக்கும் நன்றி” என்றார். லாஸ்லியாதான் சேரன் போனபோது அழுவோ அழு என்று அழுதார். சேரனை அகம் டிவியில் பார்த்து இன்னும் அழுதார் வனிதா “நானும் அடுத்த வாரம் வந்துடறேன்’ என்றார். “வனிதாவுக்கு மக்கள் கைதட்டறது ஏன்கற குழப்பம் இருக்கு. படையப்பால நீலாம்பரிக்கு கிடைக்கற கைதட்டலை உனக்குக் கொடுக்கறாங்க. நீ சந்தோஷப்படணும்” என்றார். இன்னும் குழப்பிட்டியே கோவாலு. அகம் டிவியில் வனிதா அழுததற்கும் ஆடியன்ஸ் கைதட்டினார். கெட்ட பசங்கய்யா நீங்க!

கமல் சேரனுக்கு குட்பை சொல்லும்போது பிக் பாஸ் குரல் மேடையில் ஒலித்தது. “சேரன்.. நீங்கள் போட்டியில் தொடரலாம். சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்படுகிறீர்கள்” என்றார். ”எல்லாம் பார்த்துட்டேன்” என்ற சேரன் சீக்ரெட் ரூமைத் தேர்வு செய்து ரகசிய அறைக்குச் சென்றார். கமல் ரகசிய அறையின் டிவி திரையில் தோன்றி சேரனிடம் பேசினார். “முன்னால் மூன்று விளக்கு இருக்கும். நீலம் உங்களுக்கு உணவு வந்துவிட்டது என அறிவிக்கும் விளக்கு. மஞ்சள் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே நடப்பனவற்றை ஒளிபரப்பப்படப்போவதை அறிவிக்கும் விளக்கு. சிவப்பு எமர்ஜென்ஸிக்காக” என்று அறிவித்தார். ”அவ்ளோ பெரிய வீட்ல இருந்து தனியா சின்ன அறைல இருக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க இருக்கிறேன்” என்றார் சேரன்.

Bigg Boss Sept 8

உள்ளே ஹவுஸ்மேட்ஸ் என்னென்ன பேசிக்கொள்வார்கள் என்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே வீட்டுக்குள் செல்ல இருக்கிறார் சேரன். ஆட்டம் சூடு பிடிக்குமா இல்லையா என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்!

Bigg Boss Trivia

பெரிய மனுஷங்களோடு மல்லுக்கட்டும் பிக் பாஸே இந்தக் காட்டு காட்டுதே, கொஞ்சம் சின்னப் பசங்கள விட்டா என்ன ஆகும் என்று யோசித்தார்கள் லண்டனில். அங்கே 2003ல் Teen Big Brother: The Experiment என்றொரு வெர்ஷனை அறிமுகப்படுத்தி ஒளிபரப்பினார்கள். 10 நாட்கள் 8 போட்டியாளர்கள். 13 முதல் 19 வரை வயது. அதிலேயே உள்ளே ஒரு ஜோடி செக்ஸ் வைத்துக்கொண்ட கதையெல்லாம் விமர்சிக்கப்பட அந்த சீசனோடு நிறுத்தப்பட்டது அது.ஆனால் வேறு சில நாடுகள் இதை மீண்டும் முயன்றன. அதை வரும் நாட்களில் பார்ப்போம்!

ஸாரோ

4 thoughts on “‘டோட்டல் டேமேஜ்’ வனிதா, ‘நாட் அவுட்’ சேரன்… பரபரக்கும் பிக் பாஸ்!

  1. வனிதா சில நேரங்களில் தவறாக பேசுபவர்தான், அதற்காக அவா் சொல்வது எல்லா நேரங்களிலும் தவறாகாது.. கமலும் சாண்டிகுரூப்புடன் சேர்ந்து வனிதாவை மட்டும் எல்லா வாரமும் கார்னர் செய்வது நடுநிலை இல்லை.. நீங்கள் சாண்டி குரூப் செய்யும் தவறுகளை ஒருபோதும் எழுதுவதில்லை..

  2. Sherin Vanitha kita pesiyathu makkalukku therium. Ana housemates Ku theriyathey. Vanitha yepdi veetukkulla athai sollalam? 👹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

ஒரே நேஷன், வனிதாவை இலக்காக்கிய நாமினேஷன்! கடுப்பான சேரன்

Tue Sep 10 , 2019
கேப்டன்சி போட்டியில் வனிதா விட்டுக்கொடுத்தார். அது ஏன் என்பதைக் கீழே படித்துக்கொள்ளுங்கள். சேரன் இன்றைய நிகழ்வுகள் முழுவதையும் ரகசிய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எல்லாவற்றையும் கூலாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஒரு விஷயத்துக்கு மட்டும் கோபப்பட்டார். அதுவும் என்னவென்று படிக்கும்போது உங்களுக்குத் தெரியும்! தப்பு பிக்பாஸ்… தப்பு! “எனக்குப் புரியல. சீரியஸா புரியல. என்னய்யா நடக்குது. கம்பேரிசன்ல சேரன் அண்ணா ஏன் பின்னாடி போனாங்க” என்று வனிதா ஷெரினிடம் […]
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!
%d bloggers like this: