வனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட்!

முயற்சி = முகின்!

ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று  முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன்.

தர்ஷன், லாஸ்லியா இருவரும் இலங்கை. மற்ற எல்லாரும் இந்தியா. இவர் மட்டும் மலேசியா என்பதால் யாருடனும் ஒட்டமுடியாமல் இருந்தார். பிறகு ’வெளிநாடு’ என்கிற அடிப்படையில் தர்ஷன், லாஸ்லியாவோடு கொஞ்சம் ஒட்டிக்கொண்டார். ஆனால் சாண்டி, கவின் இருவருமே இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவாக இருக்க அதில் நெகிழ்ந்து நட்பானார். பாடல் பாடுபவர் என்ற முறையில் சாண்டி, கவினுடன் இன்னும் நெருக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தார்.

Housemates

அபியுடனான உறவு நெருக்கமாக கொஞ்சம் தடுமாறினார். வெளியில் ஒரு காதலி இருப்பதால் அபி, தன்னிடம் நெருங்குவதை அனுமதிக்கவில்லை. அதேசமயம் அவரைக் காயப்படுத்தி விலக்கவும் முடியாமல் தவித்தார். அபிக்காக சில சண்டை போட்டார். அபியுடனும் சண்டை போட்டார். அதன்பிறகு பாய்ஸ் க்ளப்புடன் மிக நெருங்கி முழுமையாக களத்தில் இருந்தார்.

‘சத்தியமா நான் சொல்லுறேண்டி.. உன் பார்வை ஆளத் தூக்குதடி’ என்று வீட்டுக்குள் இவர் போட்ட பாட்டு தெறி ஹிட். நேற்று பிக்பாஸ் வீட்டுப்  பார்ட்டியில் அதைப் பாடியபிறகு இன்று முழுவதும் அதைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். கடைசி வாரங்களில் எல்லாம் நன்றாகவே வீட்டினுள் வளையவந்தார். வெற்றி தோல்வியைத் தாண்டி, வெளியில் வந்து முகினுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது!

ப்ரஸ் மீட்!

101-ம் நாள். சீனாகும் அவன் வந்தான்னா…” பாடலுக்கு வெளியிலிருந்து வந்த ஏழு டான்ஸர்களோடு வீட்டிலிருக்கும் நால்வரும் சேர்ந்து ஆடினர். ‘இன்னும் 5 நாள்தாம்ப்பா’ என்று பிளாஸ்மா டிவியில் அறிவித்துக் கொண்டிருந்தார் பிக்பாஸ்.

மதியம் 12.20க்கு ஆக்டிவிட்டி ஏரியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. முதன்முறையாக இப்படி ஒரு நிகழ்வு. ‘வெள்ல வந்து பேட்டி பேட்டின்னு கேட்பாங்க. இப்பயே குடுத்துறலாம்” என்று சேனல் முடிவெடுத்துவிட்டது போல.

Biggboss Pressmeet

பிக்பாஸ்ல என்ன கத்துகிட்டீங்க… என்ன கத்துக்கொடுத்தீங்க?

சாண்டி: குடும்பத்தோட அட்டாச்டா இருக்கணும்ங்கறதைக் கத்துகிட்டேன்.

வெளில போனதும் என்ன பண்ணப்போறிங்க?

லாஸ்லியா: அப்பா அம்மாட்ட பேசப்போறேன். மிடில் க்ளாஸ் குடும்பமா அவங்களுக்கு நிறைய அதிர்ச்சிகள் இருக்கும். நான் என்ன பண்ணினேன் ஏன் பண்ணினேனெல்லாம் அவங்ககிட்ட பேசிப் புரியவைக்கணும்.

100 நாள்ல மறக்க முடியாத நாள் எது… ஏன் மறக்க முடியாது?

ஷெரின்: வனிதா என்னைப் புகார் பண்ணினப்ப எல்லா பக்கமும் போய் அழுதேன். தர்ஷன் வெளில போனப்பவும் அப்படித்தான்.

100 நாட்கள்ல என்ன இழந்திருக்கீங்க?

முகின்: வீட்டை மிஸ் பண்ணினேன். எதையும் இழக்கல. நிறைய மனிதத்தைக் கத்துகிட்டேன். ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொண்ணு கத்துகிட்டேன்.

இங்க உருவான நட்பு, ரிலேஷன்ஷிப் வெளில போயும் தொடருமா?

சாண்டி: இதைக் கேட்பதே தவறு. நிச்சயம் தொடரும்.

பெரிய குழுவா இருந்து அப்பறம் சின்னச் சின்ன குழுவா இருந்தீங்க. அந்த மாற்றம் பத்திச் சொல்லுங்க.

லாஸ்லியா: ஷெரின்கூட நெருங்கி நெருங்கி வருவோம். அப்பறம் விலகிருவோம். இப்ப எல்லாரும் போய் கிட்ட கிட்ட நெருங்கும்போது புரிதல் அதிகமாய்டுச்சு.

ஷெரின்: சாக்‌ஷி, அபி கூடத்தான் ஆரம்பத்துல நான் நட்பா இருந்தேன். அவங்க கேரக்டரை அனலைஸ் பண்றது ஈஸியா இருந்தது. அதை அக்செப்ட் பண்றதுக்குதான் லேட் ஆச்சு. ஏத்துகிட்டப்பறம் அது ரொம்ப அழகான நட்பா மாறிடுச்சு.

நீங்க ரொம்ப சேஃபா விளையாடறீங்களோனு தோணுது.

சாண்டி: எனக்கு என் பொண்ணை விட்டு வந்ததால அவ பேரைச் சொன்னாலே மெல்ட் ஆகிடுவேன். அதுனால அப்பப்ப அழுகை வரும். அது ஸ்ட்ராட்டஜிலாம் இல்லை. அப்றம் நண்பர்கள் எதுனா சொன்னா ஃபீல் பண்ணுவேன்.

Pressmeet

எதிர்காலத் திட்டங்கள் என்ன?

முகின்: எனக்கு சின்ன வயசுலயே கைதட்டல்னா பிடிக்கும். அதுனாலயே கலைத்துறை மேல ஆர்வம் உண்டு. திரைப்படங்கள்ல நடிக்க ஆசையும் உண்டு. அது போக மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்கணும்னும் ஆசை உண்டு.

உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? (இப்டியே கேட்டிருக்கலாம். அதென்ன ’ரெண்டு பெண்கள் ஃபைனல் போய்ட்டீங்க?’னு கேட்கறது!)

ஆண் பெண்ங்கறத தாண்டி யார் ஜெயிச்சலும் சந்தோஷம்.

உங்க அப்பாக்கு பாசமான பொண்ணா இருக்க என்ன பண்ணுவீங்க?

அவங்க இங்க ரியாக்ட் பண்ணின விதம், நாங்க இருந்த சொசைட்டியோட பிரதிபலிப்பு. கஷ்டப்படற நேரத்துல யாரும் வர்ல. யார் என்ன சொன்னாலும் நான் அவங்க பொண்ணுதானே… அதெல்லாம் பேசி சரிபண்ணிடுவேன்.

வனிதா ரிட்டர்ன்ஸ்!

அபி, சாக்‌ஷி, சேரன், வனிதா, கஸ்தூரி ஐவரும் பலப்பல பரிசுப் பொருட்களோடு வந்தனர். கட்டியணைத்தல்கள், பரிசுப் பரிமாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்தன.

Housemates

‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையானவர்கள். தங்களுக்காக பேசத் தயங்கியதில்லை. அதன் தொகுப்பு’ என்று பிக்பாஸ் வீடியோ போடத் தயாரானார். பிக்பாஸ் சொன்னதை வனிதா வளவளவென்று மொழிபெயர்த்தார்.

அதன்பிறகு உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை புகைப்படங்களாக வைத்திருந்தார்கள். அதில் பிடித்தது எது என்று பேசச் சொன்னார் பிக்பாஸ்.

சாண்டி: நேத்து ஜாலியான ஃபோட்டோஸ்ல நான் நிறைய இருந்தேன். இங்க சிலதுல இருக்கேன். ஆனா இன்வால்வ் ஆகல. வனிதா பத்த வெச்சுட்டாங்க, கொளுத்திப் போடறாங்கனு சொன்னாலும் நிறைய பேரோட உணர்ச்சிகளை அவங்கதான் தூண்டிவிட்டு விளையாட்ட சுவாரஸ்யப்படுத்தினாங்க. என்ன சண்டைன்னாலும் இதோட முடிச்சுக்குவோம். ஜாலியா வெளில போவோம்.

முகின்: கட்டில் உடைச்சதும் சேரை எடுத்துட்டு கோபப்பட்டதும் ரொம்ப பாதிச்சது. அபிராமி எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவகூட பேசிட்டு கட்டிலை உடைச்சப்ப ரொம்ப கஷ்டமாப் போச்சு. அதுனால அபிக்கு பாதிப்பு ஆச்சுன்னுதெரியும். எல்லார்ட்டயும் எதும் ஹர்ட் பண்ணிருந்தா ஸாரி.

Mugen

லாஸ்லியா: நான் பசங்ககூட சேர்ந்து சுத்தின ஃபர்ஸ்ட் மொமன்ட் பிடிச்சது. நிறைய சண்டை போட்டதாலதான் ஷோ நல்லா போச்சுன்னு வர்றவங்களலம் சொல்றீங்க. வெளில போய் இன்னும் சண்டை போடுங்க.

ஷெரின்: நான் எனக்காக சண்டை போடல. ஆனா கேரக்டர் அசாசினேஷன் பண்ணினா பிடிக்காது. அந்த மாதிரி சண்டைகளால புதிய உறவுகள் கிடைச்சது… லேசா இருக்கற உறவுகள் ஸ்ட்ராங்கா ஆச்சு. சண்டை போடற அளவுக்கு விஷயம் வொர்த்தான்னு பாருங்க.

அதன்பிறகு வந்தார் வனிதா.

”ஒரு விஷயம் மனசுல உறுத்திட்டே இருக்கு. இதைப் பேசலன்னா நன் எனக்கே உண்மையா இல்லைன்னு அர்த்தம். ஷெரினுக்கும் உண்மையா இல்லைன்னு அர்த்தம். ஷெரினுக்கும் அது தெரியும். நடிச்சுட்டுப் போலாம். ஆனா நான் நடிக்க விரும்பல” என்று பீடிகையோடு ஆரம்பித்தார்.

Vanitha

“ஷெரின்… ஒண்ணு சொல்றேன். மொத நாமினேஷன் வந்ததில இருந்து நீ வேற ஷெரினா ஆகிட்ட. உன்னைப் பத்தி ஆடியன்ஸ் ஒரு விஷயம் கேட்டாங்க. அதைப் பத்திப் பேசின என்மேல பழி விழுந்தது. Affair அப்டிங்கற வார்த்தையை சொன்னதுக்கு.. தர்ஷனும் நீயும் பழகறத வெச்சு நான் அப்டிச் சொன்னதுக்கு நான் பொய் சொல்றேன்னு சொன்னாங்க. அதாவது அப்படி ஒரு விஷயம் எதுவுமே இல்லைன்னும், உன் மைண்ட்ல இல்லைன்னும் நீ சொன்ன. என் வாதம் என்னவா இருந்ததுன்னா… ‘’இல்லைன்னு சொல்லாத”னு நான் சொன்னேன்.  அப்ப நீங்க ஒத்துக்கல. அதோட பிரதிபலிப்புதான் தர்ஷன் இப்ப வெளில போய்ட்டான். இதை வெளில போய்ப் பார்த்தா உங்களுக்கே புரியும்.. நான் பேசி உங்களை மூட் அவுட் பண்ண விரும்பல. அவ்ளதான் சொல்வேன்.”

ஷெரின்: “கொஞ்சம் நிறுத்து வனிதா. எந்த எடத்துலயாவது நீ ‘ஷெரின், உனக்கு தர்ஷன் மேல ஈர்ப்பு இருக்கு, காதல் இருக்குன்னு நீ சொல்லிருந்தா, ’ஆமா அவன்மேல ஃபீலிங்ஸ் இருக்கு’ன்னு நான் ஒத்துகிட்டிருப்பேன். நீ Affair ங்கற வார்த்தைய சொன்ன. அதுக்கு அர்த்தம் புரிஞ்சுக்க.

வனிதா: வெளில வந்து பாரு. அப்ப உனக்குப் புரியும். ரெண்டு வாரம் நடந்தத நீ பார்த்தா தெரியும். எம்மேல மொத்தமா திருப்பி நான் வெளில போய்ட்டேன். அப்றம் தர்ஷன் வெளில போனான். நாம இதை வெளில போய்ப் பேசலாம்.

Vanitha and sherin

சேரன்: வனிதா, இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப்னால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதுனாலதான் தர்ஷன் வெளில போனானு சொல்றது தப்பு.

வனிதா அதற்கு இதை விரிவா பேசமுடியாது, அனுமதிச்சா பேசறேன் என்றார். (அப்பறம் ஏன்மா ஆரம்பிச்ச?) சாக்‌ஷி, ஷெரின் இருவரும் “ஒண்ணை ஆரம்பிச்சா அப்டீ பாதில முடிச்சா சரியா?” என்று கேட்டனர்.

சாக்‌ஷியை அட்டாக் செய்தார் வனிதா. நீ வெளில போய் நடந்தத பாத்தியா. நீ பேசாத.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. நான் பொய் சொல்றேனா.. என்று வழக்கமாக சொல்லும் வசனங்களைச் சொன்னார். ஐந்தாறு பேர் அடிக்க வந்தால் ஒவ்வொருவராக வீழ்த்த வேண்டும் என்கிற டெக்னிக்.

ஷெரின் உடைய ஆரம்பித்தார். சாக்‌ஷி அவரை தேற்றிக் கொண்டிருந்தார். பிறகு கஸ்தூரியும் சேர்ந்தார். மீண்டும் வனிதா தான் தரப்பைச் சொல்ல வந்தார். எல்லாரும் மனம் கசந்து வெளியேறினார்கள்.

மீண்டும் சொல்கிறேன். வனிதாவின் ஒவ்வொரு செல்லிலும் நெகட்டிவிட்டி மட்டுமே இருக்கிறது. என்ன கன்டென்ட் கொடுத்தாலும் இவரையெல்லாம் உள்ளேயே விட்டிருக்கக்கூடாது. கன்டென்ட் கிடைக்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா பிக்பாஸ்?

வனிதா, தர்ஷனுக்கு ஓட்டு கிடைக்காததற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்றார். என்ன சம்பந்தம் என்று புரியவே இல்லை. தர்ஷனின் ஓட்டு பிரிய ஷெரின் காரணம் என்கிறார். இது வெறும் யூகம்தான். வனிதாவின் திட்டம் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதே. வனிதா அன்றைக்கு Affair என்று சொன்னதை எல்லாரும் கமென்ட் அடிக்க தான் தோற்றுவிட்டதை உணர்ந்து, அதை இன்று சரிசெய்யவே சொல்கிறார். முழுக்க முழுக்க சுயநலம்.

உள்ளே வனிதாவிடம் லாஸ்லியா, சாண்டி பேசிக்கொண்டிருக்க, ‘எனக்கும் மனசு இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வனிதா அங்கே இருந்த கஸ்தூரியிடம் ‘கொஞ்சம் வெளில இரு. பெர்சனலா பேசணும்’ என்று அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பினார். அதற்குப் பிறகு கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் ஒரு சண்டை நடந்தது.

வனிதா பிறகு ஷெரினிடம் சமாதானப்படுத்த பேசினார். இருக்கற சண்டைலயே பெரிய சண்டை எதுனு கேட்டீங்கள்ல… இன்னைக்குப் போடற சண்டைதான்’ என்று வனிதா முடிவெடுத்து  வந்திருப்பார் போல.

ஷெரின் ‘இதப் பத்தி பேசறது எனக்குப் பிடிக்கல’ என்று சொல்லிவிட்டார். சரி வெளில போய் இதப் பத்திப் பேசிக்கலாம்’ என்று வனிதா சொல்ல அதோடு முடித்தனர் இன்றைய எபிசோடை.

Vanitha  and Sherin

மணி 10.30-தான் ஆகியிருந்தது. என்னமோ இதைவிட ஒரு சண்டை நடந்திருக்கும்போல. அதை நாளைய எபிசோடுக்கு வைத்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டார்கள் என்பது புரிந்தது!

Bigg Boss Trivia

Big Brother: பிரிட்டன் சீசன் ஒன்றில் Celebrity Hijack என்றொரு தனி சீசன் வெறும் 26 நாட்களுக்கு நடந்தது. 18 முதல் 21 வயது வரை உள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு 26 நாட்கள் அந்த நிகழ்ச்சி நடந்தது. ஃபைனல் நடந்த 2ம் நாள் தவிர பாக்கி 25 நாளுக்கும் ஒரு பிரபலம் பிக்பிரதரை ஹைஜாக் செய்துவிட்டேன் என்று உள்ளே வருவார். அவரே டாஸ்க் உட்பட விதிகளைச் சொல்லி பிக்பிரதராக வீட்டுக்குள் நிகழ்ச்சியை நடத்துவார். ரொம்ப எமெர்ஜென்ஸி என்றால் மட்டும் கன்ஃபெஷன் அறைக்குப் போய் நிஜ பிக்பிரதருடன் கலந்தாலோசிப்பார். 25 நாளும் 25 பிரபலங்கள் வீட்டுக்குள் போய் பிக்பிரதராக நடந்து கொண்டார்கள்.

26 நாட்கள் என்றாலும் அங்கே அது செம ஹிட்டான நிகழ்ச்சியாக இருந்தது.