பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா?

losliyaa

 

இரண்டாவதாக வந்த போட்டியாளருக்கு தனியாக செய்தி மேடை செட்டப்பில் ஏதோ செய்திருந்தார்கள். அவர் இலங்கைத் தமிழில் பேச, கமலும் அவர் பங்குக்கு ‘தெனாலி’த் தமிழில் கதைத்தார். நீங்களும் குக்கு, நானும் குக்கு என்னும் மைக்கல் மதன் காமராஜன் வசனம் போல, ஏற்கெனவே உள்ளே நுழைந்த ஃபாத்திமா பாவும் செய்தியாளர். தற்போது வந்திருக்கும் லாஸ்லியாவும் செய்தியாளராம். கொலொம்போவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறாராம். அவரின் தந்தைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் லாஸ்லியா (losliya ). செல்லமாக லாஸ், லாஸ்லி என்றெல்லாம் கூப்பிடுவார்களாம் பாஸ். இதை ஏனோ, ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார் ஃபாத்திமா பாபு. சரி, இனி இப்படி ஏதாவது தானே நாள்தோறும் பேச வேண்டும்.

லாஸ்லியா இலங்கையைச் சேர்ந்தவர். இன்ஸ்டாவில் அவரது பக்கத்துக்குப் போனால், 2017ம் ஆண்டிலிருந்து இன்ஸ்டாவில் இருக்கிறார். ஆனாலும் நாலாயிரத்துக்கும் குறைவான ஃபாலோயர்ஸ் தான்!. News1XDigital என்னும் இலங்கை சானல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துவருகிறார்.  அதற்குள்ளாகவே லாஸ்லியாவின் பெயரில் ஃபேக் அக்கௌன்ட்களும், லாஸ்லியா ஆர்மிக்களும் இன்ஸ்டாவில் குடிகொண்டுவிட்டன. (என்னா வேகம்!)

நெருங்கிய நண்பர் ஒருவரின் ரெஃபரன்ஸ் மூலம் பிக்பாஸூக்குள் நுழைந்தவர் லாஸ்லியா. இலங்கை போரின்போது, சொந்த வீட்டைவிட்டு வேறு இடத்துக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டவர். தன் தந்தை வெளிநாடு சென்றதால், பெரும்பாலும் அவர் இல்லாமே நாள்களை கழித்தார் லாஸ்லியா.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

அட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி!!! #BiggBossSeason3

Sun Jun 23 , 2019
ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸில் ஆடல் பாடல் இறுதியாய் நடந்தேறியது. ஆம், காலா, விஸ்வாஸம் படங்களில் நடித்த சாக்ஸி அகர்வால் பிக்பாஸ் ஹவுஸில் மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் மூலம் தமிழர்களின் மனதில் இடம்பிடித்து பிரபலமாக வேண்டுமாம். (இப்படித்தான் கொள்ள பேரு பிக் பாஸுக்கு வர்றாங்க சாக்ஸி ). வெல்கம் ஹோம்!  
Sakshi Agarwal
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!