அதிகாலைப் பாடலுக்கு கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, லாஸ்லியா போல ஆட முயற்சி செய்தார் மீரா. ம்ஹும். செல்ஃப் எடுக்கலம்மா! நாமினேஷன், ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ டாஸ்க்… சரவணன் சமாதான ஸ்பெஷலிஸ்ட்… சரி…  வேறென்ன என்ன ஆச்சு இன்னைக்கு?

தடுமாறும் நாற்பது!

இந்தப் பதிவின் முதல் சில பத்திகளைப் படித்துவிட்டு இங்கே வாருங்கள். 40 வயதைத் தாண்டிய போட்டியாளர்கள் குறித்த வாசகரின் கேள்விக்கு அன்றே சொன்னது, இன்றைக்கு நடந்தது.

மோகன்வைத்யா, சரவணன் தன்னை தரக்குறைவாக நடத்துவதாக புகார் சொன்னார். அவர் காட்டியதாக சொல்லும் ஒரு ஆக்‌ஷன் தவறுதான். ஆனால், மற்றபடி சரவணன் அப்படிக் காட்டினாரா என்பதே கேள்விக்குறிதான். தவிர, மோகன் வைத்யாவைத் தரம்தாழ்த்துவதாக செய்ததாகத் தெரியவில்லை. சாண்டியும் கவினும் அதை சரவணனிடம் சொல்லும்போதுகூட சரவணனுக்கு எதுவும் புரியவில்லை. மோகன் வைத்யா சொன்னதாகச் சொன்ன ஆக்‌ஷனையும் அவர் செய்யவில்லை என்பது ரீவைண்ட் பண்ணிப் பார்த்ததில் தெரிந்தது. சரவணன் உரிமையாக வந்து மோகன் வைத்யாவிடம் பேசினார். “அதை நான் இயல்பாக ஜாலியாகத்தான் சொன்னேன்” என்றவர் மோகன் வைத்யா கடுமையாக இருப்பதைப் பார்த்ததும் “இப்டிலாம் மனசுல வெச்சிருப்பீங்கனு தெர்ல.. மன்னிச்சிருங்க” என்று காலில் விழுவதுபோல காட்டிவிட்டுக் கோபமாகச் சென்றார்.

மோகன் வைத்யா அழுதது சரியில்லை என்று தோன்றியது. ஒருவித பச்சாதாப நாடகமாக அது இருந்தது. சாக்‌ஷி ஆறுதல் சொல்ல, அவரைக் கட்டிப்பிடித்து தழுவி அழுததெல்லாம் சகிக்கவில்லை.

சேரனும் சாண்டியும் நான் ஏற்கெனவே எழுதியிருந்த – ‘அவர்கள் ‘நாங்கள் அனுபவஸ்தர்கள். மரியாதை வேணும்” என்று நினைப்பார்கள். இளசுகளோடு ஆடி ஓடி விளையாடுவார்கள்; அப்போது ஜாலியாக இருக்கும். ஆனால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முட்டிக்கொள்ளும். ‘நான் வயசுல பெரியவனில்லையா? எனக்கு மரியாதை இல்லையா?’ என்று முனங்குவார்கள்’ – என்ற வரிகளை சொல்லி “இனி அவரை ரொம்ப ஓவரா கலாய்க்கறதோ, பேசிட்டிருக்கறதோ வேண்டாம்” என்று முடிவெடுத்தார்கள்.

ஐயா.. நாமினேஷன்னா என்னாங்கய்யா!

 

ஒவ்வொரு வாரம் நாமினேஷன் எனும்போதும், முதல் சீசனில் கஞ்சா கருப்பு பிக்பாஸிடம் கேட்ட, இந்தக் கேள்விதான் நினைவுக்கு வருகிறது. சரி, இந்த வார நாமினேஷனில் – ’யார்… யாரை… எதற்கு’ என்று பார்ப்போம்.

லாஸ்லியா

மீரா – தர்ஷனுடன் அவர் பேசுவதை நான் தவறாக எடுத்துக்கொண்டதாக வனிதாவிடம் சொன்னார். என்னைப் பற்றி பிறரிடம் பேசியது பிடிக்கவில்லை.

மோகன்வைத்யா – சில விஷயத்துக்கு அவர் கோபப்படறது எனக்கு நியாயமாப் படல.

தர்ஷன்

மீரா – நான் சொல்லாத விஷயத்தைச் சொன்னதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சரவணன் – மோகனப்பாவை இன்சல்ட் பண்ற மாதிரி நடந்துகிட்டார்.

tharshan

முகின்

மீரா – வாரங்கள் கடக்கக் கடக்க அவ ஒரு நிலையில இல்ல.
சரவணன் – மத்தவங்களை பாதிக்கற மாதிரி பேசிடறாரு

சேரன்

மீரா – தன்னை மாத்திக்க மாட்டீங்கறாங்க
சரவணன் – வேலைகள்ல ஈடுபாடு காட்ட மாட்டீங்கறாரு

சாண்டி

மீரா – மாத்தி மாத்தி பேசிக் கொழப்பி விடறாங்க
சரவணன் – ஜெயில்ல ஒத்துகிட்டுப் போனப்பறம், இல்ல நான் சாப்டமாட்டேன்னு சொன்னது எனக்குத் தப்பா பட்டுது.

மோகன் வைத்யா

மீரா- ஈடுபாடு இல்லாம இருக்காங்க
சரவணன் – தமாஷாவோ, சீரியஸாவோ என்னை ஹர்ட் பண்றாரு

ரேஷ்மா

மீரா – நிறைய புகார் சொல்றாங்க. வேலை செய்யறதில்லை
சரவணன் – என்னை, மோகன் சாரை இன்சல்ட் பண்றாரு

மதுமிதா

மீரா – நிறைய பொய் சொல்றாங்க.
ரேஷ்மா – ரெண்டு பக்கமும் பேசிட்டு, ரெண்டு பக்கமும் போட்டுக்குடுத்து நடிக்கறாங்க.

அபிராமி

மீரா – 3 வாரமா எந்த டீம்ல போட்டாலும் ப்ராப்ளம் கிரியேட் பண்றாங்க
சரவணன் – ரேஷ்மா, மோகன் வைத்யா ரெண்டு பேரையும் ஹர்ட் பண்றாரு

ஷெரின்

மீரா – இல்லாத பிரச்னையைப் போட்டு பெரிசு பண்ணி குழப்பறாங்க
சரவணன் – பெரிசா இன்புட் தர்றதில்ல. வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டே இருக்கார்.

கவின்

மீரா – தர்ஷன் விஷயத்துல முன்னுக்குப் பின் முரணா நிறைய பேசறாங்க.
சேரன் – ஜெயிலுக்குள்ள போனப்பறம் இது சரினு தோணல, உண்ணாவிரதம் இருப்பேன்னு முரண்பட்டாரு.

மீரா

சேரன் – ஆரம்பத்துல இருந்தே அவருக்கு என்மேல தனிப்படட் வஞ்சமா இருக்காரு.
தர்ஷன் – அவர் என் நம்பிக்கை துரோகத்துக்காக அவரை நாமினேட் பண்றேன்.

சரவணன்

 சரவணன்

மோகன் வைத்யா – சிறுபிள்ளைத்தனமா எல்லாத்துக்கும் கோச்சுக்கறார்.
அபிராமி – நான் தவறே செய்யாம என்னை ஜெயில்ல போட டிரை பண்ணினாங்க.

சாக்‌ஷி

அபிராமி – எமோஷனலி நான் அவளால டிஸ்டர்ப் ஆகிருக்கேன்.
மதுமிதா – டபுள் ஸ்டாண்டார்டா இருக்காங்க.

மோகன் வைத்யா, மீரா, சேரன், சரவணன் மற்றும் அபிராமி ஆகிய ஐவர் இந்த வார வெளியேற்றலுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

சமாதான ஸ்பெஷலிஸ்ட் சரவணன்

சரவணன் கிராமத்தில் இருக்கும் ஒரு பொறுப்பான சித்தப்புவாகவே வாழ்கிறார். சமையல் அணிக்கு தலைவி மதுமிதா என்றாலும், இவர்தான் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார். செம உற்சாகமாகவும் சீரியஸாகவும் எடுத்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்.

சரவணன்

மதுமிதா கொஞ்சம் லேட்டாக சமைப்பதால் சரவணனின் ஸ்பீடுக்கு செட் ஆகவில்லை. ‘நான் யாரையாச்சும் சமைக்க வெச்சுக்கறேன்’ என்றார். மதுமிதாவுக்கு அது ஹர்ட் ஆனது. யாரும் குறுக்க வரக்கூடாதுன்னுதான் நான் ஏற்கெனவே சொன்னேன் என்றார். நான் சமைக்கப் போகல என்று அழுதார். கேப்டனான சாக்‌ஷி பொறுப்பாக அவர் அருகில் வந்து அமர்ந்து சமாதானப்படுத்தினார். சரவணன், சாண்டி, தர்ஷன், கவின் என்று எல்லாரும் அழைத்தபோதும் வரவில்லை. “பூண்டு இல்லாம ரசம் வைக்க முடியாது’னுச்சு. நான் வெச்சுட்டேன். அதுக்கு சங்கடப்பட்டுது” என்றார் சரவணன்.

மீரா தேவையில்லாமல் சரவணனிடம் வந்து ”இன்னைக்கே உங்க மேல ரெண்டாவது புகார். கொஞ்சம் அடக்கி வாசிக்கறீங்களா?” என்று மூக்கை நுழைத்தார்.

அதன்பிறகு சாக்‌ஷி வந்து “மதுமிதா உங்க டீம்ல இல்லைன்னு சொல்லீட்டாங்க. அவளுக்கு பதிலா யார் வேணும்?” என்று கேட்டார். சரவணன் “அவ இருக்கட்டும். நான் வேற டீம் போறேன்” என்றார். பிறகு “நான் பேசி சமாதானப்படுத்தறேன்ம்மா. சப்ப மேட்டரு. சும்மா கோச்சுக்கறா” என்று சமாதானப்படுத்தினார். மதுமிதாவிடமும் பேசினார். பிகு செய்துகொண்டார் மது. ”நான் வரமாட்டேன்.. யார்கூப்டாலும் வரமாட்டேன்” என்று நகர்ந்தார்.

சாண்டி மரணகலாயாக சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். பிறகு சாப்பிடும்போது சரவணன் மதுமிதாவுக்கும் அவருக்குமான உரையாடலைச் சொல்லி ‘கோச்சுக்கிச்சு” என்று மதுமிதா தலையில் செல்லமாகக் குட்டி “லூஸு மது. உன்னை மண்டை மண்டையாக் குட்டுவேன்” என்று மதுமிதாவின் ஈகோவைத் திருப்திப்படுத்தினார்.

 

சொல்வதெல்லாம் உண்மை…

அபிராமி, முகினிடம் நாமினேட்டில் அவர் ஏன் வந்தார் என்று குழம்புவதாகச் சொன்னார். கவின், லாஸ்லியாவை கடலை வறுத்துக்கொண்டிருந்தார்.

நான் சொல்வதெல்லாம் உண்மை எனும் டாஸ்க். ஒரு சீட்டில் இரண்டு வரிகள் எழுதப்பட்டிருக்கும். அந்தந்த வரிகளுக்குப் பொருத்தமானவர் யார் என்று காரணத்துடன் சொல்ல வேண்டும் என்பது டாஸ்க்.

சேரன்:

என் வாழ்நாள் முழுவதும் உன்னை மறக்க மாட்டேன் – மகள் என்பதால் லாஸ்லியா!
இந்த வீட்டை விட்டு வெளியேறிய நொடியே உன்னை மறந்துவிடுவேன் – மீரா

மோகன் வைத்யா

உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. – சாண்டி. சாண்டி மாதிரி எண்டர்டெய்னராக இருக்க முடியலையே என்று பொறாமையா இருக்கு.

நான் பொறமைப் படுமளவுக்கு உன்னிடம் ஒன்றுமே இல்லை – மீரா.

அபிராமி

நீ நண்பனானது என் பாக்கியம் – முகின். சத்யமா இப்படி ஒரு நம்பிக்கையான ஃப்ரெண்ட்ஷிப் எதிர்பார்க்கல. ஃப்ரெண்ட்ஷிப்புக்கு மேலான்னுகூட குழப்பமா இருக்கு. ஐ லவ் யூ

உன்னைப் பார்த்ததே என் வாழ்வின் சாபம் – மீரா

லாஸ்லியா

உன்னுடன் பேசப்பிடிக்கும் – கவின்
உன்னுடன் பேசப்பிடிக்காது. – கலாய்ப்பாரு, அதனால சாண்டி.

கவின்

நீ உண்மையானவன் – எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரேன்… சரவணன் அண்ணன்.

உன்னை நம்பமுடியாது. – மீரா

ரேஷ்மா

நீ கண்ணியமானவன் — சேரன்
You are an indecent person – கக்கூஸ் பத்தியே பேசிட்டே இருப்பாரு.. அந்தக் கக்காக்கூட்டத்தின் தலைவன் சாண்டி.

முகின்

உன்னுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது – அபிராமி
நீ ஒரு அறுவை – மீரா

மதுமிதா

அடக்கமானவர் – லாஸ்லியா
அதிகப்பிரசங்கி – சாண்டி மாஸ்டர்.

சாண்டி

உன்னைக் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு – மோகன் வைத்யா. நைனா ஓ நைனா…

என்னைப் பற்றி நீ என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை – லாஸ்லியா

சாண்டி

மீரா

என் தகுதிக்கு ஏற்ற போட்டியாளர் – தர்ஷன்.
உன்னை ஒரு போட்டியாளராகவே பார்க்கவில்லை – சேரன்

சரவணன்

நீ ஒரு வீரன்: தர்ஷன்
நீ ஒரு கோழை: மோகன் வைத்யா (எதுக்கெடுத்தாலும் அழறாரு)

மீராவின் பெயரை நெகடீவாகவே பலரும் சொல்லவே அவர் ஏதோ அவர் ரொம்ப ஸ்டிராங்காக இருப்பவர் போல நடித்துத் தள்ளினார். ’பழிபோன உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே; என்று 0.1% கூட சம்பந்தமில்லாத ஒரு வரியைச் சொன்னார். எதற்குச் சொன்னார் என்று அரை மணிநேரம் யோசித்தும்கூட எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ’ நான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதால்தான் என்மேல இவ்ளோ காண்டுல இருக்கீங்க. எல்லாருக்கும் ஆல் த பெஸ்ட். லெட் அஸ் ஹேவ் எ ஹெல்த்தி காம்படிஷன்” என்று பீலா விட்டார்.

ஸ்டோர் ரூமில் சரவணனின் பையன் ஃபோட்டோ வந்திருந்தது. தர்ஷன் அதை எடுத்துவந்தார். ஏற்கெனவே பிக்பாஸிடம் கேட்டிருப்பார் போல. “என்ன ஃபோட்டோவா?” என்று கேட்டார். இல்ல என்று சொல்லிவிட்டு அதைக் காண்பித்தார். ஒரு ரியாக்‌ஷனும் இல்லை சரவணனிடம். ஆனால் தனியாக சாண்டியிடம் காண்பித்தார். சாண்டி `குருநாதா… வேற லெவல் குருநாதா நீ..’ என்று பிக்பாஸுக்கு நன்றி சொன்னார்.

எல்லாரும் சுற்றி அமர்ந்துகொண்டு கவினை லாஸ்லியா அண்ணா என்று அழைக்கச் சொன்னார்கள். அவரும் சொன்னார். கவின் அதைப் பற்றி லாஸ்லியாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார். “அவங்க சொன்னா ஏன் சொல்ற.. ஃப்ரெண்டுனு சொல்ல வேண்டியதானே” என்றார். லாஸ்லியா பாவம்.. கவின் மனசு வருத்தப்பட்டுவிட்டதே என்ற வருத்தம் அவர் குரலிலும் முகத்திலும் தெரிந்தது. இப்படித்தாம்மா ஏமாந்துர்றீங்க. ஹும்!

நாமினேஷனில் பெயர் வந்ததாலும், அதற்குப் பிறகு வந்த டாஸ்ட்கில் எல்லாரும் ஓபனாகவே மீரா பற்றி நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்ததாலும் கொஞ்சம் ஆங்காரமாகவே இருக்கிறார் மீரா. நாளை கேவிக்கேவி அழும் படலம் நடக்கும் என்பதை சர்வ நிச்சயமாகச் சொல்லலாம். பாருங்கள்!

Bigg Boss Trivia

அமெரிக்க பிக்பிரதரில் வீட்டுக்குள் காய்கறித் தோட்டம், கோழிக்கூண்டு எல்லாம் இருக்கும். ஏழெட்டுக் கோழிகளும் இருக்கும். ஹவுஸ்மேட்ஸே அவற்றைப் பராமரித்து, அவை இடும் முட்டைகளை சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.