வெற்றிகரமான 25வது நாள் என்று பிக்பாஸ் வீட்டைச் சுற்றிப் போஸ்டர் ஒட்டலாம். கவினின் காதலும், மீராவின் கன்னாபின்னாத்தனங்களுமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸில் புரிதல்களும் பிரிதல்களும் என்னென்ன ரியாக்‌ஷன்களைச் செய்து கொண்டிருக்கின்றன?

லாஸ்லியா

எங்கே செல்லும் இந்தப் பாதை…. – கவின் பாடுகிறார்!

 

24ம் நாளான நேற்று கவின் / சாக்‌ஷிக்கு இடையேயான உரையாடலில் ‘சர்ரா.. ‘ என்று கவின் சாக்‌ஷியைச் சொல்லி முடித்தாரல்லவா? சாக்‌ஷி எழுந்து பாத்ரூம் போனார்.

நேற்றே சொன்னேன். தூண்டிலில் மீன் இருக்க வேண்டும். அதை வெளியில் இழுத்து சாகடிக்கவும் மாட்டார்கள்; விட்டு வாழ வைக்கவும் மாட்டார்கள் சில ஆண்கள். கவின் அந்த ரகம்தான்.

அதை நிரூபிக்கும்விதமாக, பின்னாலேயே சென்றார் கவின். ‘நீ வர்ற வரை வெய்ட் பண்ணுவேன்’ என்றார். சாக்‌ஷி “டோண்ட். நீ போய் சாப்பிட்டுவிட்டுப் படு’ என்றார். ம்ஹும். வெளியில் அமர்ந்து தேவுடு காத்தார்.

பிறகு அங்கு லாஸ்லியாவும் சாண்டியும் வந்தனர். உள்ளே சாக்‌ஷி இருப்பது தெரியாமல் லாஸ்லியா கவினிடம் குசலம் விசாரித்தார். பிறகு அவர் சென்றுவிட ஷெரின் வந்தார்.

கவின்

’நட்பு நட்புதாண்டா’ என்று எண்ணவைத்த தருணம் அது. “பேபி ஐ’ம் ஹியர். யு வாண்ட் மீ டு கம் இன்சைட்’ என்று ஷெரின் கேட்க சாக்‌ஷி அவரை உள்ளே அழைத்துக்கொண்டார். “ஏய்.. ஏன் அழற..” என்று ஷெரின் கேட்டதிலிருந்து சாக்சி நெடுநேரமாக அழுதுகொண்டிருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இருவரும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தனர். கவின் அமைதியாக – தான் பாவம் என்று காட்டிக்கொள்ள – அமர்ந்திருந்தார்.

கதவருகே வந்தபிறகு சாக்‌ஷி திரும்பி கவினிடம் “நீ போய் சாப்பிடு. நான் இவகூட கொஞ்ச நேரம் இருக்கணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கவின்

உறவுச்சிக்கல்களில் முக்கியமான இடம் இதுதான். பெண்களால் சடக்கென்று துண்டித்துக்கொள்ள இயலாது. ‘அவன் பாவம்ல’ என்று நினைப்பார்கள். இன்னொருத்தியை அவன் நினைத்திருந்தாலும் ‘ப்ச்ச்.. வேற யாரும் பண்ணாத தப்பா.. இப்ப எனக்காக உருகி நிக்கறான்ல’ என்று பாவம் பார்ப்பார்கள். ஆண்கள் ஜெயிக்கின்ற இடமே அதுதான், “உன்னைலாம் மதிக்கவே கூடாது.. போடா” என்று அவள் போய்விட்டால் இவனுக்கும் புத்திவரும். ஆனால் நிஜத்தில்.. ம்ஹும். நூற்றுக்கு ஓரிருவர் மட்டுமே அப்படி செய்வார்கள்.

கவின் பிக்பாஸிடம் பேசுவது போல, மக்களின் மனம் கவரும் நாடகத்தை கொஞ்சநேரம் நடத்தினார். விளையாட்டா நாலு பேரை லவ் பண்ணிட்டிருக்கலாம்னு நெனைச்சேன் என்றார். ‘என்னது ஜாலியாவா?’ என்று தோன்றியது எனக்கு.

செம்ம ஷெரின்

வெளியே ஷெரின் மிகச் சரியாக சாக்‌ஷியைத் திட்டிக்கொண்டிருந்தார். “அவன் சாப்டா என்ன… சாப்டாட்டி என்ன.. அவன் குழந்தையா? நீ கம்னு இரு. உன் வேலையப் பாரு” என்றார்.
.
இரவு இரண்டு மணிவரை லாஸ்லியாவும் கவினும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நடுவில் சாக்‌ஷிவேறு வெளியே வந்து பாத்ரூம் போகும்போது, லாஸ்லியாவும் கவினும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபடி சென்றார். பிறகு தன் கட்டில் மேட்; பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷெரினிடம் ‘அவங்க வெளில உட்கார்ந்து பேசிட்டிருக்காங்க’ என்றார்.

லாஸ்லியா

பிக்பாஸ் வேற லெவல் ஆளுதான். 25ம் நாள் காலையை “ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க” பாடலை அதிகாலைப் பாடலாய்ப் போடார். வரிகளை சொல்லியபடிப் பாடிக்கொண்டிருந்தார் ரேஷ்மா. ‘என்னா பாட்டு’ என்று ஷெரினும் பாராட்டினார்.

க்ளீனிங் டீம் கேப்டன் சாக்‌ஷிக்கு க்ளீன் செய்ய ஒரு ஆணை பிறப்பித்தார். “நேத்து நைட் நீங்க டைனிங் ஏரியா க்ளீன் பண்ணீங்களா?” என்று கேட்டார். மீரா ”ம்ஹும். பண்ல” என்றார். இரண்டு பேருக்கும் அதற்கு ஒரு சண்டை ஓடியது.

மீரா வாய்ப்பேச்சு மட்டும்தான். அதுவும் நேர்மையில்லை. யாரையும் பேசவிடுவதில்லை. இந்த லட்சணத்தில் தான் சரியாக இருக்கிறோம் என்று நெனைப்பு வேறு.

மீரா சாண்டி

இதயம் உடைத்த லாஸ்லியா!

ஷெரின், தர்ஷனுக்காக ஒரு இதயவடிவ சப்பாத்தி செய்தார். லாஸ்லியா ஒரு போர்க் எடுத்து அதைக் குத்திவிட்டுச் சென்றார். பாத்ரூமில் தர்ஷனும் சேரனும் அதுபற்றி லாஸ்லியாவிடம் கேட்க “அப்படித்தான் பண்ணுவேன். சாப்பிட வரச்சொன்னா வரமாட்டீங்கறான்” என்றார் லாஸ்லியா. லாஸ்லியா அந்த இடம்விட்டுச் சென்றதும் ஷெரின் பாத்ரூம் உள்ளிருந்து “எல்லா கான்வர்சேஷனையும் கேட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சென்றது அழகாக இருந்தது. அதன்பிறகு டைனிங் டேபிளில் தர்ஷனும் ஷெரினும் ஒரே தட்டில் சாப்பிட்டனர். லாஸ்லியா காதுபடவே “உணவு உன்னைப் போலவே செம ஹாட் தர்ஷன்” என்று ஷெரின் வம்பிழுத்தது.. செம குசும்பு!

முன்னறைக்கு அழைத்தார் பிக்பாஸ். டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்களாக தர்ஷனும், ரேஷ்மாவும் எல்லாராலும் தேர்வாயினர். டாஸ்க் உட்பட இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்டவராக சேரன், சரவணன் இருவரும் ஹவுஸ்மேட்ஸால் சரிசமமாக செலக்ட் ஆக, சேரன் – தனது ஓட்டை சரவணனுக்குப் போட்டு – சரவணனை ஜெயிக்க வைத்தார்.

 

சரவணன் , தர்ஷன், ரேஷ்மா ~ பெஸ்ட்… மீரா சாக்ஷி வொர்ஸ்ட்

ஆக, சரவணன், தர்ஷன், ரேஷ்மாதான் அடுத்தவார தலைவர் பதவி வேட்பாளர்கள்.

அடுத்ததாக இந்த வாரம் சிறப்பாக இல்லாதவர்களாக மீரா மற்றும் சாக்‌ஷி இருவரையும் தேர்ந்தெடுத்தார்கள்.

சேரன் அபிராமி

இந்த இடத்தில் சாக்‌ஷியின் கேப்டன்சியைப் பற்றிச் சொல்லவேண்டும். கடந்த மூன்று வாரங்களில் பெஸ்ட் கேப்டன் இவர்தான். எல்லா பிரச்னைகளையும் மிகவும் அமைதியாகக் கையாள்கிறார் சாக்‌ஷி, தன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உட்பட.

ரேஷ்மா, கவினிடம் நேர்மையாக சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். “நீ சாக்‌ஷியிடம் இருந்து விலகி வெறும் நட்பாக இருக்க நினைத்தது சரி. ஆனால் அந்த முடிவு எடுத்த உடனே லாஸ்லியாவுடன் நெருக்கமானதும், எந்நேரமும் லாஸ்லியாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிப்பதும் மிகப் பெரும் தவறு. அப்படிச் செய்ததால் சாக்‌ஷிக்கு எமோஷன் அதிகமானது. எந்தப் பெண்ணுக்கும் அப்படித்தான் ஆகும். நான் உட்பட” என்று ரேஷ்மா சொன்னது உறவுச் சிக்கலில் ஒரு முக்கியமான பாடம்.

ஜெயிலுக்குள் ஜெயில்!

ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டார்கள் சாக்‌ஷி, மீரா இருவரும். சாக்‌ஷி அபிராமியிடம் கவினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “கொஞ்சம் கம்னு இருக்கச் சொல்லுங்க பிக்பாஸ். பேசிட்டே இருக்காங்க. தலவலிக்குது” என்றார் மீரா. சொல்லிவிட்டு ஜெயிலுக்குள் இருந்த பாத்ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.

ஷெரினும் ரேஷ்மாவும் சாக்‌ஷியுடன் வந்து பேசிக்கொண்டிருந்தனர். ஷெரின் “கவின் என்ன பண்றான்னு பார்த்துட்டு வரேன். வனிதாவோட இடத்தை யாராச்சும் நிரப்பணும்ல” என்று சொல்லி எழுந்து சென்றார்.

மீரா

அரை மணி நேரம் கழித்து மீராவை பிக்பாஸ் மைக் பேட்டரி மாற்ற அழைத்தார். வெளியில் வந்தார் மீரா. வந்தவர் பிக்காலித்தனமாக கேமராவைப் பார்த்துப் புகார் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நான் யாரும், என்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லல. அப்படி சிலர் நெனைக்கறாங்க. ஆனா அப்படியெல்லாம் எதும் இல்லை. இவங்க கத்திக் கத்திப் பேசிட்டிருந்தாங்க. ஆனா நான் பாத்ரூம் உள்ள போனப்பறம் அமைதியா பேசினாங்க. அதை மொதல்லயே அவங்க பண்ணிருக்கலாமே. நான் ஜாலியாத்தான் இருக்கேன்” என்று தத்துப்பித்து என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் சோஃபா, சேர் உட்பட எல்லாருமே மீராவை “என்னா ஜென்மம்யா நீ” என்ற லுக் விட்டுக்கொண்டிருந்தனர். அதன்பிறகு சாக்‌ஷி “பிக்பாஸ்.. இவளைப் பத்திப் பேசறதத் தவிர ஆயிரம் வேலை எங்களுக்கு இருக்கு. அவ ஏதோ அப்படி நினைச்சுட்டிருக்கா. அவளுக்கு எடுத்துச் சொல்லுங்க” என்று சிரித்தபடி சொன்னார்.

சாக்ஷி ஷெரின்

 

தமிழ் டீச்சர் மீரா

`வம்பிழுக்காமல் வாழ்நாளில் ஒருநாளும் இருக்கக்கூடாது’ என்று சபதமெடுத்து வாழ்ந்து வரும் ஒருவர் மீரா. சாக்‌ஷியை வம்பிழுத்தார். “தமிழ் உனக்குப் புரியல. தமிழ்ல ஒருவார்த்தை மாறினாலும் பொருள் நிறைய மாறும். நான் சொன்னத யாருமே புரிஞ்சுக்கல. எல்லாரும் தப்பா நினைச்சுட்டிருக்காங்க” என்று ஆரம்பித்து 20 நிமிஷத்துக்குப் பேசினார். அதற்கு விளக்கம் சொல்ல சாக்‌ஷியை பேசவே விடவில்லை. பிறகு “உன்கிட்ட ஒரு பெரிய கெட்ட பழக்கம். யாரையும் பேச விடமாட்ட. அதுனால இந்த வாரம் வீடியோ போடச் சொல்லலாம். திஸ் ஈஸ் த எண்ட் ஆஃப் டிஸ்கஷன்” என்றார் சாக்‌ஷி.

மீரா

“ஓகே” என்று ஒப்புகொண்ட மீரா, அதற்குப் பிறகு பத்துநிமிடம் பேசினார் என்பது.. சாக்‌ஷியின் போறாத காலம்.. பாவம்!

Bigg Boss Trivia

நம்ம ஊர்ல டாஸ்குகளைத் தவிர வேறு விளையாட்டுகள் உள்ளே இல்லை. வேறு சில நாடுகளிலெல்லாம், பிக்பாஸ் வீட்டுக்குள்ளே செஸ் போர்டு இருக்கும். போட்டியாளர்கள் நிறைய நேரம் அதில்தான் செலவழிப்பார்கள்.

கொஞ்சம் மனசு வெச்சு கேரம் போர்டும், செஸ் போர்டும் கொடுக்கலாம்ல பிக்பாஸ்!