mugen rao

 

மலேசிய பாடகரும், நடிகருமான முகின் ராவ் இந்த சீசனில் பங்கேற்கிறார். இந்தியாவிற்கு இதற்கும் முன் ஒருமுறை கூட முகின் ராவ் வந்ததில்லையாம். யூட்யூப் தளத்தில் இவர் எழுதி , இசையமைத்துப் பாடிய ‘ அபிநயா’ என்கிற பாடல், இதுவரையில் 80 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. முகின் ராவ் தன்னைய MGR என அடையாளப்படுத்திக்கொள்கிறார் (ஆத்தீ) . யூ டியூப் இசை வெறியர்கள் மத்தியில் முகின் ராவ் கொஞ்சம் அதிகமாகவே ஃபேமஸ். இரண்டு இலங்கை நபர்கள், ஒரு மலேசியா என இந்த முறை வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பிக்பாஸை அலங்கரிக்க இருக்கிறார்கள்.