நாமினேஷன், டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க்ஸ்… இந்த ரணகளத்திலும் இது தேவையா கவின்?

3

நாமினேஷன் நாள் இன்று. அதுபோக இன்று முதல் Ticket To Finale டாஸ்குகள்.

வாழ்த்துகள் வீட்டினர்களே!

பிக் பாஸ் வீட்டில் 85-ம் நாள். 16 பேரில் துவங்கிய இந்த ஆட்டம். இத்தனை நாட்கள் கடந்து, இப்போது ஏழு பேரில் வந்து நிற்கிறது. சேரன், சாண்டி, ஷெரின், தர்ஷன், முகின், லாஸ்லியா, கவின் என்று இந்த ஏழு பேருக்கும் நம் எல்லோர் சார்பிலும் வாழ்த்துகள். இவர்களில் சேரன் மட்டும் எவிக்ட் ஆகி, ரகசிய அறை ஒதுக்கப்பட்டு மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். மற்ற அனைவரும் இதுவரை ஆடியது நாட் அவுட் இன்னிங்ஸ்.

Bigg Boss Sept 16

’அன்ன’பூரணி வனிதா இல்லாததால் சமைக்க சிரமப்பட்டதைக் காட்டினார்கள். தோசைக்கல்லை ஸ்டைலாக கையிலெடுத்துச் சுற்றி எங்கோ பறந்த வண்டை, சுடும் தோசைமாவில் மாட்டவைத்து “அய்யயோ வண்டு” எனச் சொல்ல வைத்தார் சாண்டி. “ஒழுங்கா சுடாம எங்கயோ போற வண்டை இழுத்துப் போட்டுக்கிட்டீங்க” என்றார் கவின். “ஏப்பா… நான் வெஜ் சமைக்கறேன்னு நினைச்சுக்கங்க. நான் வெஜ் சாப்ட மாட்டீங்களா?” என்று பதில் சொன்னார் சாண்டி.

”அய்யோ இவங்ககிட்ட என்னை மாட்டிவிட்டுட்டுப் போய்ட்டியே வனிதா” என அங்கலாய்த்தார் ஷெரின். பதிலுக்கு “ஆமா.. நாமினேட் பண்ண வேண்டியது. பண்ணீட்டுப் போனா, புலம்ப வேண்டியது” என்று ரிப்பீட்டடித்தார் தர்ஷன். “வாய மூடு” என்று அடக்கினார் ஷெரின் என்று கொஞ்சநேரத்துக்கு ஜாலியாக இருந்தது வீடு.

Bigg Boss Sept 16

ரூல்ஸ்லாம் டமால்தானா!

நாமினேஷன் படலம். இனி சிரமதிசைதான். சென்ற வாரம் சொன்னதுதான். இருப்பது ஏழே பேர். கேப்டன், தான் இருவரைத் தவிர ஐவரில் இருவரைத் தெரிவு செய்ய வேண்டும். அதிலும் சென்ற வாரம் எல்லாரின் குடும்ப உறுப்பினர்களைப் பார்த்தாகிவிட்டது. அவர்களோடு “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” பாடியாகிவிட்டது. இனி ஹவுஸ்மேட்ஸுடன் “என்னம்மா கண்ணு சௌக்யமா… ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. யானைக்குச் சின்னப்பூன போட்டியா துணிஞ்சு மோதித்தான் பட்டபாடு கேட்டியா!’ பாடவேண்டும். இதை வெளியில் பார்த்துக்கொண்டிருக்கும் ‘எல்லா நாளும் கார்த்திகை’ கோஷ்டி என்ன நினைக்கும் என்ற உறுத்தலோடே பண்ண வேண்டும். பிக் பாஸுக்கு கண்டெண்ட் அறுவடைதான் போங்கள்!

முதலில் சேரனை அழைத்தார் பிக் பாஸ்.

சேரன்: “யார் மேலயும் பொறாமைலயோ வேண்டாம்னோ காழ்ப்புணர்வுலயோ சொல்லல. ஷெரின், லாஸ்லியாவ பண்ண வேண்டாம்னு நினைக்கறேன். முகின், தர்ஷன் தகுதி உடையவர்களா இருக்கறாங்க. அதுனால கவின், சாண்டிய நாமினேட் பண்றேன்.”

Bigg Boss Sept 16

ஷெரின்: கவின் & லாஸ்லியா. கவின் ரொம்ப சோகமாவே இருக்கான். லாஸ்லியாவும்தான்.

சாண்டி: இதுக்கப்பறம் யாரையும் குறை சொல்லி நாமினேட் பண்ண முடியாது. எல்லாரும் ஃபேமலி. ஆனா கேம்ங்கறதால, சேரன் சாரும், ஷெரினும்.

லாஸ்லியா: நான் தர்ஷன், சேரப்பா, சாண்டி, கவின் நாலு பேரும் ஃபைனல்ஸ் போகணும்னு நான் நெனைக்கறேன். முகின், ஷெரின் இரண்டு பேரையும் நாமினேட் பண்றேன்.

தர்ஷன்: எல்லாரும் கடுமையான போட்டியாளர்கள். வரிசைப்படி பார்த்தா அந்த லிஸ்ட்ல கவினும் லாஸ்லியாவும் கடைசியா இருக்காங்க. அதுனால அவங்க.

முகின்: சேரன் சார், லாஸ்லியா.

கவின்: சேரன் அண்ணா & ஷெரின்.

சேரன், ஷெரின், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய நால்வரும் நாமினேஷன் லிஸ்டில் வந்தார்கள்.

Bigg Boss Sept 16

பிறகு வெளியே வந்து யாரை நாமினேட் செய்தார்கள், ஏன் நாமினேட் செய்தார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சாண்டி “எல்லாமே டஃப்தான். எல்லாமே ஜாலிதான். அவ்ள்தான்” என்றார் தர்ஷனிடம்.

சேரன், முகினிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அய்யா பெரிய மொதலாளி, நாமினேஷன் பத்தி வெள்ல வந்து பேசக்கூடாதுன்றதெல்லாம் இந்த வாட்டி இல்லீங்ளாய்யா?

எல்லாருடைய உறவினர்களும் ஹவுஸ்மேட்ஸுக்குக் கொடுத்த உத்வேக உற்சாகச் சொற்களை எல்லாருக்கும் முன் அகம் டிவியில் ஒளிபரப்பினார் பிக் பாஸ். “இனிமே அவகிட்ட (லாஸ்லியா) பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று சேரன் மகள் சொன்னதை, நல்லவேளை கட் செய்துவிட்டார் பிக் பாஸ். சேரனுக்கே ஆசுவாசமாக இருந்திருக்கும்!

அதன்பிறகு ஓர் உரை ஆற்றினார் பிக் பாஸ். இந்த வாரம் Ticket To Finale வாரம் என்றார். இந்த வாரம் முழுவதும் ஸ்பெஷல் டாஸ்க்ஸ் நடக்கும். ஒவ்வொரு விதமான டாஸ்குகள். அவற்றில் விளையாடி மதிப்பெண் பெற வேண்டும். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் யார் டாப்பில் இருக்கிறாரோ அவருக்கு Ticket To Finale – நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Bigg Boss Sept 16

மீண்டும் கவின்!

இந்த அறிவிப்பு முடிந்ததும் கவின், தன் எமோஷனல் ப்ளாக்மெய்ல் வேலையை ஆரம்பித்தார். உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு லாஸ்லியாவின் மனதைக் கலைத்தார். இது தேவையில்லாத வேலை என்று பட்டது. அவரும் திருந்துகிற ஆளில்லை என்பதால் சொல்லிப் பிரயோஜனமில்லை. லாஸ்லியா கமல் முன்பு ‘யார் வெளையாடறாங்க நிஜமா இருக்காங்கனு தெரியல’ என்று சொன்னதைக் குறிப்பிட்டு ‘அப்ப நீ என்னையும் நம்பலயா?” என்று டிராமா போட்டார்.

லாஸ்லியா குடும்பம் அவ்வளவு உணர்ச்சிவசமாய் நடந்துகொண்ட பிறகும் இதை வெளியில் போய்ப் பேசிக் கொள்ளாமல், இங்கேயே பேசித் தொடரும் கவின், இதன் விளைவுகளை அறியாமல் இருக்கிறாய். இது தவறு என்று டீசண்டாகவோ, சில்லறைத்தனம் என்று கொஞ்சம் கேஷுவலாகவோ குறிப்பிடலாம்!

Bigg Boss Sept 16

லாஸ்லியாவாவது கொஞ்சம் உஷாராக இருக்கலாம். கவின் மூஞ்சியத் தூக்கி; வைத்துகொண்டால் ‘போய்யா’ என்று போய்விடலாம். ம்ஹும்! அப்படி இருந்தால்தான் பெண்கள் இன்னும் முன்னேறிவிடலாமே. எமோஷனல்தானே அவர்கள் பலவீனம்!

இரண்டு காலிலும் பலூனைக் கட்டிக்கொண்டு இன்னொருத்தர் காலில் இருக்கும் பலூனை உடைக்கவேண்டும் என்று முதல் டாஸ்க். கவின் முதலில் வெளியேற, அடுத்து முகின் அவுட். அடுத்து சேரன். ஷெரினைத் துரத்தித் துரத்திக் கஷ்டப்ப்பட்டு ஷெரினின் காலிலிருந்த இரண்டு பலூன்களை உடைத்தார் சாண்டி.

எஞ்சியிருந்தது லாஸ்லியா, தர்ஷன், சாண்டி. அதில் லாஸ்லியா ஒற்றைக்காலில் மட்டும் பலூனுடன் இருந்தார். சிறிது நேரத்தில் அவரும் வெளியேற தர்ஷன், சாண்டி இருவருக்கும் போட்டி.

Bigg Boss Sept 16

இடைவெளி விட்டு மாலை தொடர்ந்த விளையாட்டில் தர்ஷன், சாண்டியின் பலூனை உடைக்கப்போய் தன் ஒரு பலூனை உடைத்துக் கொண்டார். இரண்டாவது பலூனும் உடைந்தது. இரண்டாவது பலூன் தானாக உடைந்தது என்பதை கவனித்த பிக் பாஸ், இன்னொரு பலூனைக் கொடுத்தனுப்பினார்.

மீண்டும் போட்டி ஆரம்பித்தது. தர்ஷனுக்கு காலில் சுளுக்கு ஏற்பட எல்லாரும் சென்று உதவினர். மீண்டும் காலைத் தூக்கி சாண்டி அடிக்க, அது தர்ஷனின் முகத்தைப் பதம் பார்த்தது. சாண்டியின் உயரம் என்ன, தர்ஷனின் உயரம் என்ன… ஆனால் விளையாட்டு என்று வரும்போது என்னென்ன ஆகிறது என்று தோன்றியது.

அதன்பிறகு சாண்டியை குற்றவுணர்ச்சி தொற்றிக்கொண்டது. ‘எனக்கு கஷ்டமா இருக்குடா டேய்’ என்று சும்மாவே நின்றுகொண்டிருந்தார். “வாங்கண்ணா…” என்று தர்ஷன் அவரை கூலாக்கினார். “சாரிடா சாரிடா” என்று சாண்டி சொல்லியபடி விளையாட ஆரம்பித்தார். விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்த அந்த விளையாட்டு இரண்டு மணிநேரமாக நடந்தது. சாண்டியின் ஒரு காலில் இருந்த பலூனை தர்ஷன் உடைக்க, இப்போது இருவரும் சமநிலையில் இருந்தனர். பிறகு, சாண்டியின் பலூனை உடைத்து தர்ஷன் ஒற்றை பலூனுடன் கடைசிவரை இருந்தார்.

Bigg Boss Sept 16

முதல் டாஸ்கில் தர்ஷன் வென்றதாக அறிவித்தார் பிக் பாஸ்.

இரண்டாவது போட்டி: முகின், சாண்டி, லாஸ்லியா ஓர் அணி. தர்ஷன், ஷெரின், கவின் ஓர் அணி. இரு அணிகளுக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது.

தர்ஷன், கவின், ஷெரின் அணி வென்றது. புல் தரையாக நாம் பார்த்ததெல்லாம் வெறும் மேட் என்று அப்போது தெரிந்தது. இதுல கார்டன் ஏரியா கார்டன் ஏரியானு சொன்னியே பிக் பாஸு!

ஷெரினும் லாஸ்லியாவும் சமைத்துக் கொண்டிருந்தனர். கவினுக்கும் ஷெரினுக்கும் சமையில் ஏரியாவில் ஒரு செல்லச் சண்டை நடந்தது. லாஸ்லியா அங்கே இருந்ததால் கவின் வேண்டுமென்றே அங்கே நின்று கொண்டு கமெண்ட் செய்து கொண்டிருந்ததாகப்பட்டது.

Bigg Boss Sept 16

வின்னிங் வரிசை

அடுத்த டாஸ்க். ஒவ்வொருவரும், உள்ளே இருக்கும் ஏழுபேரை யார் வெற்றிபெறத் தகுதியுடையவர் என்று வரிசைப்படுத்தச் சொன்னார் பிக் பஸ். அதன்படி அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றார். முதலிடம் பெறுபவர் 7 மதிப்பெண்களும் கடைசி இடம் பெறுபவர் 1 மதிப்பெண்ணும் பெறுவார். இதன் கூட்டுத்தொகையின்படி யார் இந்த டாஸ்கின் முதல்வர் என்று அறிவிப்பதாகச் சொன்னார்.

இனி ஒவ்வொருவரின் தரவரிசை:

முகின்: தர்ஷன், முகின், சாண்டி, சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின்.

சாண்டி: தர்ஷன், சாண்டி, முகின், சேரன், லாஸ்லியா, ஷெரின், கவின்.

தர்ஷன்: தர்ஷன், சாண்டி, முகின், சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின்.

லாஸ்லியா: தர்ஷன், கவின், சேரன், சாண்டி, முகின், ஷெரின், லாஸ்லியா.

ஷெரின்: ஷெரின், தர்ஷன், முகின், சேரன், சாண்டி, லாஸ்லியா, கவின்.

கவின்: சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, முகின், கவின், ஷெரின், சேரன்.

சேரன்: சேரன், லாஸ்லியா, ஷெரின், கவின், முகின், சாண்டி, தர்ஷன்.

Bigg Boss Sept 16

சேரன் சொன்னது இதில் மற்றவர்கள் கருத்துக்கு – ஏன் நிஜத்துக்கும் – நேர்மாறாக இருந்தது. ஆனால் அதற்கு அவர் சொன்ன விளக்கம் சரியாக இருந்தது. ”இது ஃபைனல் அல்ல. டிக்கெட் டு ஃபைனல்தான். அந்த டிக்கெட் எனக்கு வேணும்” என்றார். கவின், சாண்டிக்கு முதலிடம் கொடுத்ததைப் பற்றிச் சொல்லும்போது “மனசு ஒண்ணு சொல்லுது, மூளை ஒண்ணு சொல்லுது. மனசுப்படி சாண்டி அண்ணன் ஜெயிக்கணும்னு தோணுது” என்றார்.

கவினுக்கும் ஷெரினுக்கும் ஒரு செல்லச் சண்டை ஆரம்பித்தது. “நீ எனக்கு யாருமில்ல. உன் மேல லவ்வும் வர்ல. வெறுப்பும் வர்ல” என்று ஷெரின் சொல்ல ஷெரினைத் துரத்தித் துரத்தி வெறுப்படைய வைக்க முயற்சி செய்தார் கவின். பிறகு ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பது போல லாஸ்லியாவிடம் வந்து இருட்டில் பேசிவிட்டு குட்நைட் சொன்னார்.

Bigg Boss Sept 16

கடைசியாக ஒரு விளக்கம். ’சேரனின் உறவினராக வந்தது சகோதரி என்று சொல்லலயே பிக் பாஸ். மனைவினு நெனைச்சுட்டேனே’ என்று நேற்று எழுதியிருந்தேன். வாசகர்கள் ’சொன்னாரு… நீ கவனிக்கல ஸாரோ.. பார்க்காம எழுதிருக்க. என்ன இப்படி’ என்று திட்டியிருந்தார்கள். தவறு பிக் பாஸ் மீது இல்லை. என்மீதுதான். வந்தது மனைவியோ என்று என் உள்ளுணர்வில் பதிவாகி இருக்கிறது. ஆனால், ஒளிபரப்பான அன்று சகோதரி என்றுதான் எழுதியிருக்கிறேன். நேற்று எழுதியதுதான் தப்பு!

கமெண்ட் செய்த வாசகர்கள், “இல்லையே ஸாரோ.. நீ கரெக்டாதானே எழுதிருக்க. என்ன குழப்பம் உனக்கு?” என்று கேட்டிருக்கலாம்.

நான் ஒரு மிஸ்டேக் நீங்க ஒரு மிஸ்டேக். இதுக்கும் அதுக்கும் சரியாப் போச்சு.. ஓகேவா! 🙂

Bigg Boss Trivia

இந்தி பிக் பாஸ் சீசன் 8ல் 100 நாள் முடியும்போது Bigg Boss Halla Bol என்று நிகழ்ச்சியை நீட்டித்தார்கள். முந்தைய சீசன்களில் விளையாடிய ஐந்து பேரை மீண்டும் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். ஏற்கெனவே வீட்டில் இருந்த சிலரோடு இவர்களும் போட்டி போட்டார்கள். மீண்டும் 35 நாட்கள் நீடித்தது போட்டி. இறுதியில் ஐந்து பேரை சாம்பியன்ஸ் என்று தேர்வு செய்தார்கள். ஒன்றுக்க்கு பதில் ஐந்து வின்னர்!

ஸாரோ

3 thoughts on “நாமினேஷன், டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க்ஸ்… இந்த ரணகளத்திலும் இது தேவையா கவின்?

  1. தமிழ்நாடே கவினின் நடத்தைகளை கண்டு காரி உமிழும்போது அவர் எப்படி வாக்கெடுப்பில் முன்னிலையில் இருக்கிறார் ? அதன் மர்மம் என்ன ? கள்ளவோட் போடும் கும்பல்களின் சதிவேலைகளை சேனல் தடுத்து நிறுத்துமா, இல்லையென்றால் தேர்தல் கமிஷனில் முறையிட வேண்டியதுதான் போல !!! நெஞ்சு எரிகிறது இந்த பித்தலாட்ட செயலை ninaithaal

  2. Zaaro…..Kindly be unbiased in your writings….When you are ready to write against kavin be fair with everything….If he is sitting silently thinking about the video it’s losliya who has to move away from him but with love she is trying to console him for the video that has hurt him….And he again and again says freeya vidu nan pathukuren….Why don’t you see in a man’s perspective…And also lossliya’s character is also portrayed as woman dominated by men your story , why do you say her like that when she only consoles the guy who got hurt by her love and her parents….No boy can be this much decent in loving a girl in a public forum….Even Cheran can see the beautiful love between them in that few days in secret room….When the person whom you love is down the other person will automatically come for them either Kavin is down or losliyaa is down the either will try to console each other these many days….If lossliya consoles you have a problem like girl should not go behind him…She also got affection love and care to him….Also you have said kavin is playing with sherine bz lossliya was near her….Don’t put your view of perspection in the story like he is trying to make lossliya interested towards him….It’s sherine who said Kavin to make her either love him or hate him and he takes it as fun and tried to irritate her so that Sherin would hate him….At last when he says good night to loss for a minute after speaking few words with losliya also is a big problem for you in your story….Nearly 75 days out of which nearly 40 days they are close together as they both spent most time chit chatting there…..All of a sudden everything changed for the respect they have with their parents and friends….Now again when they both staying there for few more weeks a good night and good morning is a problem to you….Also kindly note cheran balloon was broken by itself and he is said to be out likewise if game is to be fair dharshans balloon also broke by himself while playing but they are giving him another chance….If you clearly watched this you should have mentioned this unfair decision by big boss in your content….Well I m your regular reader and you write unbiased till yesterday except in the love issue of kavin and losliya as per my view….Give respect to their love…All other feelings can be easily forgotten but not love and that too when you got to be in same house and meet each other every minute and you are asking both to be normal is not easy for anyone….Think in this perspective also….Good work and continue you writing unbiased….Good luck….

  3. ஸாரி. ஸாரோ கொஞ்ச நாளாக உங்களுக்கும் பிக்பாஸீக்கும் லீவ் விட்டுட்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

முகின் 27, கவின் 26:34; மிரண்டுபோன சேரன்... கேம் ஆன் பிக் பாஸ்!

Wed Sep 18 , 2019
86-ம் நாள். Ticket To Finale டாஸ்குகளின் தொடர்ச்சி. இதில் ஒரு டாஸ்கில் கவின் ஆச்சர்யப்படுத்தி இரண்டாமிடம் பெற்றதுதான் இன்றைக்கு ஹைலைட்டாக அமைந்தது. அண்டு த வின்னர் ஈஸ்… ஷெரினை வம்பிழுத்துக்கொண்டிருந்தார் கவின். கொஞ்சம் தள்ளி அமர்ந்து சிரித்தபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் லாஸ்லியா. கார்டன் ஏரியாவில் ஒரு லீடர் போர்டு இருந்தது. போட்டியில் வெற்றிபெற்றால் யார் எப்படி எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் எனப் பேசுமாறு ஆக்டிவிட்டி கொடுத்தார் பிக் பாஸ். […]
Bigg Boss Sept 17
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!
%d bloggers like this: