தினமும் இன்றைக்கு என்ன நடந்தது என்று சுருக்கமாக ஒரு பில்டப்பில் சொல்லிவிட்டு, பிறகு, ’அதை விரிவாகப் பார்க்கலாம்’ என்று இன்னொரு பில்டப் கொடுத்து எழுத ஆரம்பிப்பேன். இன்றைக்கு முழுவதும் நடந்ததே ஒரு பத்தியில் சொல்லிக் கடந்து செல்லக்கூடிய விஷயம்தான்.  பிறகு அதற்கென்று எதற்கு ஒரு முன்னுரை! ஆனால், இத்தனை நாள்கள் பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கவின் – சாக்‌ஷியின் Male வெர்ஷன் அப்போ சாக்‌ஷி  என்கிறீர்களா ? . சாக்‌ஷிக்கு கவினே மேல் என்னும் வெர்ஷன். நடிகர் ‘பார்த்திபன்’தனமாய்த் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.

கவின் | சாக்ஷி

சில்லறை விளையாட்டு!

காய்ன்களைப் போட்டு விளையாடும் ‘தன் கையே தனக்குதவி’ இடுபணி இன்றும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வெல்க்ரோ ஒட்டப்பட்ட ஓவர்கோட் கொடுக்கப்பட்டது. கில்லர் காய்ன் எனப்படும் ஒரு காய்னை வேறொரு போட்டியாளர் மீது ஒட்டவேண்டும். யார் மீது ஒட்டப்பட்டுள்ளதோ அவரது புள்ளிகள் பாதியாகக் குறைப்படும். கவின் – சேரன், தர்ஷன் – சாண்டி என்று இருவர் இருவராக அணிபிரித்துக்கொண்டனர்.

கவின் | சாண்டி

முதல் ரவுண்டு முடிந்ததும், இரண்டாவது ரவுண்டில் மற்ற எல்லா ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து, அதிக புள்ளிகளை வைத்திருக்கும் சாண்டி – தர்ஷனைக் குறிவைத்தனர். ஆனாலும் அவர்களை வெல்ல முடியவில்லை. கவினுக்கு அடிபட்டுவிட்ட, சேரன் தனியாளாய் மாட்டிக்கொண்டார்.

இந்த டாஸ்க் முடிந்து, கடைசியாக வரிசையாக நின்றுகொண்டு ஒவ்வொருவராக தண்ணீரில் இருக்கும் அதேபோன்ற காய்னை எடுக்க வேண்டும். அதில் எழுதப்பட்டிருப்பதைச் செய்ய வேண்டும். அதன் படி செய்து யாரோ ஒருவருக்கு பாய்ண்ட்ஸைக் கொடுப்பது, யாரிடமாவது பாய்ண்ட்ஸை எடுப்பது என்று கன்னாபின்னாவென்று மாறியது ஆட்டம். இதுக்கெதுக்குய்யா விடிய விடிய ஓடவிட்ட பெரிய மொதலாளி!

கடைசியில் சாக்‌ஷி முதலிடமும், அபிராமி இரண்டாமிடமும், மதுமிதா மூன்றாமிடமும் பெற்றனர். அதன்படி சாக்‌ஷியை அடுத்தவாரம் யாரும் நாமினேட் செய்யமுடியாது… இந்த வாரம் வெளியேறாவிட்டால்தான்.

ஆனால் இந்த வாரம் அவர் வெளியேறுவதற்கான அறிகுறிகள் ரொம்பவுமே தெரிகிறது.

அது தவிர..

முக்கியமாக நடந்தது இதுதான்.

 

இதுதவிர அபிராமி, முகினிடம் ஐலவ் யூ சொன்னதும், முகின் ’கம்னு இரேன்! ஏம்மா இப்டிப் பண்ற’ என்றொரு லுக் விட்டதும், கவின் சரவணன் போல நடித்துக் காட்டியதும் நடந்தது. தென்பாண்டிச் சீமையிலே மெட்டில் சரவணன் எவிக்ட் ஆனால் பாட, மெட்டமைத்து வைத்திருந்த ஒரு பாடலைப் பாடி ரிஹர்சல் செய்தார்கள். (சனிக்கிழமை பாடலாம் மச்சி) என்று கொசுறு கொசுறாக சில நிகழ்வுகள் நடந்தன,

சாக்‌ஷி

டாஸ்கின்போது கவின் கீழே விழ, பின்னால் சாண்டியிடம் பேசும்போது கவின் “சாக்‌ஷி தள்ளிவிட்டான்னு நெனைக்கறேன் மச்சி” என்றார். இப்படி சின்னத்தனமாக யோசிப்பதில் சாக்‌ஷியும் கவினும் செம ஜோடிதான்!

கடைசியாக வீட்டில் இருக்கும் ஆண்கள் போல பெண்கள் வேடமிட்டு அவர்கள் செய்த ஏதோ ஒன்றை நடித்துக்காட்டவேண்டும் என்றார் பிக்பாஸ். மதுமிதா சேரன் ஆவிகள் டாஸ்க்கின்போது செய்தது போல நடித்தார். முகின், மீரா மீது கோபப்பட்டது போல அபிராமி செய்தார். இவர்கள் இருவரும்தான் ஓகேவாக நடித்தார்கள். மற்றவர்கள் நடிப்பு ஓகேதான். ஆனால் எடுத்துக்கொண்ட ஸ்கிரிப்ட் பெரிதாக ஒன்றுமில்லை.. எனவே ஈர்க்கவில்லை.

ரேஸில் யார் டாப்?

சரி.. கிட்டத்தட்ட பாதிநாட்களைத் தொடப்போகிறது சீசன் 3. பதினாறில் இருந்து டாப் 10க்கு வந்துவிட்டனர் போட்டியாளர்கள். இந்த நிலையில் இன்றைக்குக் கொஞ்சம் போட்டியாளர்களில் யார் யார் வின்னர் ரேஸில் முந்துவார்கள் என்று அலசலாம்.

ஷெரின்

ஆரம்பத்திலிருந்து இன்றுவரை குறையொன்றுமில்லை. ஆனால் நிறையும் ஒன்றுமில்லை. தெளிந்த நீரோடை போல சென்று கொண்டே இருக்கிறார். சாக்‌ஷிக்கு எப்போதும் துணைநிற்கிறார். இவரது பலம் சாக்‌ஷியின் நட்பு என்றால், பலவீனமும் அதுதான். அவர் வெளியேறியபிறகு இவரது செயல்பாடுகளைப் பொறுத்து இவரது ஆட்டம் மாறும்.

ஷெரின்

சாக்‌ஷி

‘சொல்றதுக்கொண்ணுமில்ல. சிம்ப்ளி வேஸ்ட்’ கேட்டகிரி. அபிராமியிடமிருந்து கவினைத் தன்பக்கம் இழுத்தார். சாக்‌ஷி இந்த மாதிரி விஷயங்களில் எட்டடி என்றால் கவின் 16 அடி. ஷெரினின் நண்பி என்பதில் மட்டும் ஆரம்பத்திலிருந்து மாறாமல் இருக்கிறார். இன்னும் ஓரிரு வாரங்கள் இருந்தால், ஷெரின்பற்றியும் யாரிடமாவது புலம்புவார் என எதிர்பார்க்கலாம்.

அபிராமி

சீசன்3-ன் வீராணம் ஏரி. எதற்கெடுத்தாலும் கண்ணீர் கொட்டுகிற கண்களோடு, முகினைச் சுற்றிவருகிறார். கவினுடன் பழகிய ஆரம்ப நாட்களிலிருந்து சட்டென்று சுதாரித்து மீண்டார். வனிதா, ஷெரின், சாக்‌ஷி ஆகிய மூவர் கேங்கில் இருந்தபோது கெட்ட ஆட்டம் போட்டவர் சட்டென்று சில வாரங்களாக அமைதிக்கோலம் பூண்டு வருகிறார்.

மதுமிதா

இந்த சீசனின் ட்ரம்ப் கார்டு! பாசம், சண்டை, நட்பு, டாஸ்க் என்று எல்லாவற்றிலும் பங்குகொண்டு கவனிக்க வைக்கிறார். முதல் வாரத்தில் தமிழச்சிங்க’ கமெண்டுக்குப் பிறகு ஏறுமுகத்திலேயே இருக்கிறார்.

மதுமிதா

லாஸ்லியா

இதுவரை இவர் விளையாடுகிறாரா..இல்லையா என்றே கணிக்க முடியாத ஒரு போட்டியாளர். பெரிதாக சுவாரஸ்யமுமில்லை; பெரிதாகப் புகாருமில்லை. திருமண மண்டபங்களில் நம்மைச் சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை மாதிரி இருக்கிறார்.

கவின்

சாக்‌ஷிக்குக் கொஞ்சம் கீழான வெர்ஷன்; சாக்‌ஷியின் Male வெர்ஷன். சாக்‌ஷியை விட்டு லாஸ்லியா மீதான தன் ஈர்ப்பைத் தொடர்ந்து ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறார். சாண்டியுடனான நட்பு மட்டுமே ப்ளஸ்.

கவின்

சேரன்

யாருடனும் நெருங்கவும் முடியாமல் அதே சமயம் முடிந்தவரை தன் வேலைகளைச் செய்து கொண்டும் தாக்குப் பிடித்துச் சென்று கொண்டிருக்கும் ஒருவர்.

சாண்டி

ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை ஒரே மாதிரி இருக்கிறார். அதுவே பலமும் , பலவீனமுமாய் இருக்கிறது. முதலிலேயே `என் பொண்டாட்டி புள்ளைதான் என் உலகம்’ என்று அடிக்கடி சொல்லிவருவதால் ரிலேஷன்ஷிப் பிரச்னையில் இதுவரை அடிபடாதவர்.

முகின்

இவரும் டாஸ்க், வேலைகள் என்று எல்லாவற்றிலும் சிறப்பாகத்தான் செய்கிறார். இப்போதைக்கும் ஆட்டுவிக்கும் அபிராமியிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பது கிட்னிக்கு நல்லது!

முகின்

தர்ஷன்

இந்த சீசனின் சர்ப்ரைஸ் இளைஞர். வேலைகள், டாஸ்க் என்று எல்லாவற்றிலும் முழுதாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். வனிதாவோ, மீராவோ, சரவணனோ தவறு செய்யும்போது துணிந்து கேட்டவர்.

டாப் 4

இந்த டாப் டென் போட்டியாளர்கள் என் கணிப்பு இன்றைய தின நிலவரப்படி, இதுதான்: பெண்களில் மதுமிதா, ஆண்களில் முகின், சாண்டி, தர்ஷன்… இந்த நால்வரும் டாப் 4ல் வருவார்கள்.

சாண்டி, தர்ஷன் ஆகிய இருவரில் ஒருவர் டாப் 2-வில் இருப்பார்.

வின்னர்…? கவின் போனால் சாண்டி எப்படி நடந்துகொள்வார் என்பதைப் பொறுத்தது. வெய்ட் & வாட்ச்!

Big Boss Trivia

பிக் பிரதர் ப்ரேசில் வெர்ஷனின் திடீர் திடீரென்று சுவாரஸ்யமாக ஏதாவது செய்வார் பிக்பாஸ். ஒரு சீசனில் சீரியஸாக ஓட்டு வேட்டையெல்லாம் நடத்தி, வெளியேற்றப்பட்டார் ஒருவர். அழுது ஆர்ப்பரித்து வெளியே வந்தார் அந்தப் போட்டியாளர். வெளியே நின்றிருந்த நபர் சீக்ரெட்டாக ஒரு கதவைத் திறந்துவிட்டார். அது சென்று சேர்ந்த இடம், பிக் பாஸ் ஹவுஸின் சமையலறை. லிவிங் ஏரியாவிலிருந்த பிற போட்டியாளர்களில் சிலர் அழ, சிலர் சிரிக்க இவரோ புரியாமல் நிற்க… அந்த வாரம் நடந்தது Fake Eviction என்று அறிவித்தார் பிக் பாஸ்.