வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி களத்தில் குதித்ததுதான் இன்றைய ஸ்பெஷல்!

கஸ்தூரி

45 நாள் முடிந்து 46ம் நாள். ‘ புலி உறுமுது புலி உறுமுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து ‘ என எதற்கோ பொடி வைத்து பாடல் போட்டார் பிக்பாஸ். கொஞ்ச நேரம் கழித்துத்தான் , அட புலி நம்ம ‘ அந்தியில வானம்’ கஸ்தூரி என தெரிந்தது.  கவின் சும்மாயிருக்காமல் லாஸ்லியாவின் மனதை நோகடித்துக்கொண்டிருந்தார். ‘இந்த ஆம்பளைஙக்ளே இப்படித்தான்’ என்று புகார் சொல்வது போல அமைந்தது அது.

லாஸ்லியாவிடம் “நான் போனால் கவலையில்லையா?” என்று நோண்டிக்கொண்டிருந்தார். லாஸ்லியா சீரியஸாக “அப்படி இல்லடா” என்று விளக்கிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் ஒரு கேம். அந்த கேமில் வென்றால் ஒரு பரிசு காத்திருக்கும் என்றார்.

சாண்டி

மிகவும் சிம்பிள் கேம். விளையாடி முடிந்ததும் அவர்களுக்குக் காத்திருந்த பரிசுப் பெட்டிக்குள் இருந்தவர் கஸ்தூரி. தர்ஷன் மட்டும் பெட்டியைப் பார்த்ததும் முன்னதாகவே “வைல்டு கார்ட் போட்டியாளர்” என்று சரியாகச் சொன்னார். எப்படி இப்படி!

வைல்டு கார்ட் கண்டெஸ்டெண்ட் லேடி. அதுனால இந்த வாரம் லேடி யாரோதான் வெளில போகப்போறாங்க” என்று மிக அறிவுபூர்வமான கண்டுபிடிப்பைச் செய்தார் சாக்‌ஷி. அபிராமி ‘நான் அதுக்கு மேல’ என்று நிரூபித்தார். “வனிதா, மீரானு ரெண்டு பேருமே வயசுல மெச்சூர்டான ஆட்களா இருந்தாங்க. அப்படி ஒரு ஆள் வேணும்னுதான் அனுப்பிச்சிருக்காங்க” என்றார் அபிராமி.

கஸ்தூரி | ஷெரின்

”எதுக்கு வந்தீங்க” என்று தர்ஷனிடம் கேட்டுவிட்டு, ஷெரினிடம் கேட்டார் கஸ்தூரி. ‘நான் தர்ஷனுக்காக் வந்தேன்’ என்று தக் லைஃப் பதில் சொன்னார் ஷெரின். “ஆடி மாசம் இப்ப நடந்துட்டிருக்கு. ஆனா லாஸ்லியா ஆடித்தான் ஜெயிக்கணும்னு அவசியம் இல்ல” என்று கமலுக்கே டஃப் கொடுத்தார் கஸ்தூரி.   நாங்க ஏதோ தேன் மிட்டாய், தேங்காய் பர்பினு பரிசு வரும்னு நினைச்சோம். ஆனா இவ்ளோ பெரிய மிட்டாயா வந்திருக்கு என புதுவரவு கஸ்தூரியையும் கலாய்த்தார் சாண்டி. நாம கஷ்டப்பட்டு விளையாண்டதுக்குத்தான் அவங்க வந்தாங்களா, நல்ல பால்லா போட்டாய்ங்க என கஸ்தூரியின் வருகைக்கான தன் நக்கலை உதிர்த்தார் சேரன். ஆக, கஸ்தூரியின் என்ட்ரி இனிவரும் நாள்களில் கொஞ்சம் பஞ்சயாத்துக்களை உருவாக்கும் என நினைத்த பிக்பாஸ் குஷியாகியிருப்பார்.

கஸ்தூரி

அடுத்தவார தலைவர் பதவிக்குப் போட்டியிட சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூவரும் தேர்வாகினர். மூவரும் கஸ்தூரி முன் வந்து நின்று ‘ஏன் என்னைத் தலைவராக்க வேண்டும்’ என்று விளக்கம் கொடுத்தனர். “மூவருமே தகுதியானவர்கள்தான் பிக்பாஸ்” என்றார் கஸ்தூரி.

இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை. அதற்கு பதிலாக ஐந்து ஸ்பெஷல் பவர் கொடுத்தார் பிக் பாஸ். அவற்றை கஸ்தூரி ஒரு சிலருக்கு சமர்ப்பித்தார்.

சாண்டி | கவின்

 

அதன்படி..

+ ஷெரின், கஸ்தூரி சொல்லும் இடத்தில் வந்து நின்று தோப்புக்கரணம் போடவேண்டும்.
++ கவின், மூக்கால் ‘மன்னித்து விடு’ என்று எழுதவேண்டும்.
+++ தர்ஷனுக்கு மதுமிதா குடை பிடிக்க வேண்டும்.
++++ யார் பாத்ரூம் போனாலும், அபிராமி வெளியே நின்று கொண்டு பாட்டுப் பாடவேண்டும்
+++++ சாக்‌ஷி, கஸ்தூரி சொல்லுமிடத்தில் வந்து தலைகீழாக நிற்க வேண்டும்.

இதை எல்லாரையும் ஒரே இடத்தில் செய்ய வைக்கிறேன் பேர்வழி என்று கஸ்தூரி எதையோ செய்தார். கொடுமையாக இருந்தது.

உயரமான தர்ஷனுக்கு மதுமிதா குடைபிடித்தது மட்டும் கொஞ்சம் ROFL மொமண்டாக இருந்தது. மதுமிதாவைப் பார்த்து அடிக்கடி “கொடபிடிச்சுப் போற பெரியவரே.. அந்த பெய்ண்ட் டப்பாவ கொஞ்சம் எடுத்துக்கொடுங்க” என்று சாண்டி கமெண்ட் அடித்தார். தர்ஷனுக்கு மதுமிதா குடை பிடித்துக்கொண்டிருக்க அந்தக் குடைக்குக் கீழ் வந்து நின்று லந்து கொடுத்தார் ஷெரின்.

கஸ்தூரி | லாஸ்லியா

*******************
ரெண்டு நாளாக செல்ஃப் எடுக்காமல் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். அதுவும் இன்றைக்கு ரொம்பவுமே ஏனா தானோ. கஸ்தூரி வருவதற்காக செட்டப் செய்த விளையாட்டு ஸ்கூல் குட்டீஸ் லெவலில் இருந்தது. அதையாவது இன்னும் சுவாரஸ்யமாக ஆக்கியிருக்கலாம்.

ஒன்றுமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதால் கஸ்தூரிக்கு என்ன ரோல் என்று பார்க்கலாம்.

“நான் ரொம்ப கோவப்படுவேன். கோவத்தை அடக்கணும்னுதான் இங்க வந்தேன்” என்றார் கஸ்தூரி. ஆக அவர் வனிதா பாதி… மீரா பாதி கலந்து செய்த கலவையாக இருப்பார் என்று நினைக்கிறேன். பெண்களில் அவர் ஷெரினுடன் ஒட்டிக்கொள்வார். ஷெரினுடன் கூடவே சாக்‌ஷி இருப்பதால் அவருடனும். சாக்‌ஷி – ஷெரின் கூட்டணி இவரால் பிரிய நேரிடலாம்.

”லாஸ்லியா சும்மா பொம்மை மாதிரி வந்து போய்ட்டிருக்காங்க. அவங்களை ஆக்டிவா இன்னும் உற்சாகமா விளையாட விடுங்க” என்று பிக் பாஸ் சொல்லி அனுப்பியிருப்பார் போல. லாஸ்லியாவைத் துரத்திக்கொண்டிருக்கிறார் கஸ்தூரி. அது நிறைவேறலாம்.

சமையலறையில் இருந்த, மதுமிதா இன்றைக்கு ரொம்பவுமே உற்சாகமாக இருந்தார். “எனக்கு சமைக்கத் தெரியும்.. யாரும் என்னை டாமினேட் பண்ணாதீங்க” என்று சரவணன் – மதுமிதாவுக்கு நடந்த உரையாடல் ஞாபகம் வருகிறதா? சரவணன் வெளியேறிவிட்டதால் அந்த ஏரியாவில் வேலை செய்யத்தெரிந்த ஒரே நபராக இருந்தார் மதுமிதா.

“எனக்கு வெஜ் சமைக்கத் தெரியும்” என்று சொன்னார் கஸ்தூரி. ஆக மதுமிதா Vs கஸ்தூரி விரைவில் நடக்கலாம்.

எது எப்படியோ.. எங்களுக்கு கொஞ்சம் எண்டர்டெய்ன்மெண்ட் குடுங்கய்யா!

Big Boss Trivia

பிக் பாஸ் / பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெளியே செல்லவேண்டியது யார் என்பதை பார்வையாளர்கள் ஓட்டு வைத்து முடிவு செய்கிறார்கள்.  அமெரிக்க பிக் பிரதரில் சில சீசன்களில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதையும் பார்வையாளர்கள் ஓட்டு வைத்து முடிவு செய்வார்கள். கலந்து கொள்ள நிர்வாகத்தின் தரப்பில் ஒரு பட்டியலைத் தயார் செய்து அதை மக்களிடம் காண்பிப்பார்கள்.

இவர்களில் யாரை உள்ளே அனுப்பலாம் என்று கேட்கும். வாக்குகளைப் பொறுத்து ஹவுஸ்மேட்ஸ் உள்ளே அனுப்பப்படுவார்கள்.

இங்கே அப்படிச் செய்தால், உங்கள் சாய்ஸ் யார் என இரண்டு பேரைச் சொல்லுங்களேன்!