கெஸ்டு… ஆனா விட மாட்டாங்க ரெஸ்டு; சண்ட செய்யனும்ல? – ‘அட்றா அட்றா’ மோடில் பிக் பாஸ்!

வீட்டுக்குள் ஆளனுப்பி இன்னும் உள்ளிருப்பவர்களை உசுப்பி விட்டதுதான் இன்றைய ஹைலைட்!

சண்ட போடணும்!

இன்றைய எபிசோடுக்கு போகும் முன், உள்ளே மூன்று பேரை விருந்தினராக பிக் பாஸ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்ப்போம்:

ஒரு வீட்டுக்குள் எப்போதெல்லாம் சண்டை வரும் என்று யோசித்துப் பாருங்கள். யோசிக்க ரொம்பவும் கஷ்டமாக இருந்தால் சிலபல ஆப்ஷன்கள் தருகிறேன்.

  • நண்பர்களால்
  • உறவினர்களால்
  • பணக்கஷ்டத்தால்
  • குழந்தைகளால்

Bigg Boss Sept 4

சர்வநிச்சயமாக இதில் பணக்கஷ்டமும் உறவினர்களும் முக்கிய இடம் வகிக்கும். உறவினர்கள் அதிகம் இல்லாத வீட்டில் பணக்கஷ்டமெல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது. ஆக, அதிக வாக்குகள் கிடைப்பது உறவினர்கள் என்பதாகத்தான் இருக்கும்.

“வனிதாவை உள்ளே அனுப்பிச்சதுக்கு வண்டை வண்டையா கேட்கறாங்க. அவங்க போய்ட்டா இன்னும் 30 நாளை சமாளிக்கறது எப்படி? இன்னும் 30 நாளுக்கு நிலைக்கற மாதிரி ஒரு சண்டைய வரவைக்க என்ன பண்ணணும்?” – ரூம் போட்டு யோசித்த பிக் பாஸ் இந்த மூவரை – மோகன் வைத்யா. சாக்‌ஷி, அபிராமி – உள்ளே அனுப்புகிறார். முதலிலேயே எல்லாருடனும் பழகிக் களித்தவர்கள் என்ற முறையில் இவர்கள் உறவினர்களுக்குச் சமம். தவிர இவர்களில் நட்பு பாராட்டுபவர்கள் டோண்ட் கேர் ரகமாக இருப்பார்கள். ‘நீ என் லவ்வர், நீ என் பொண்ணு, நீ என் பையன், நீ என் டாடி’ என்று உறவு முறை சொன்னவர்களால்தான் பஞ்சாயத்துகள் நடக்கும்.

Bigg Boss Sept 4

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்று போகப் போகப் படித்தால் புரியும்.

நேற்றின் மிச்சத்தை ஒளிபரப்பினார்கள். அபிராமி “கெஸ்டை நீங்க எண்டர்டெய்ன் பண்ணுங்க” என்று சொல்ல கவின், லாஸ்லியா கலாய்த்துக் கொண்டிருந்தனர். சாக்‌ஷி வனிதாவிடம் ”நான் இப்ப என்ன ஃபீல் பண்றேன்னா, அதெல்லாம் வொர்த் இல்லனு ஃபீல் பண்றேன்” எனவும் வனிதா “யூஸ்லெஸ். அவன்கிட்ட உன்னாலதான் சாக்‌ஷி போனதுனு புரியவெச்சுட்டிருக்கேன். லாஸ்லியாவும் கவினும் ரொம்ப ஓவராப் போறாங்க இப்பலாம்” என்றார்.

சாக்‌ஷி “அதத்தான் நான் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன். அப்பலாம் ஃப்ரெண்ட்ஷிப் ஃப்ரெண்ட்ஷிப்னாங்க. இப்ப அந்த ஃப்ரெண்ட்ஷிப் எங்க?” என்றவர் “நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் கரெக்டா இருக்கு. அப்பறம், ஷெரின் தர்ஷன் வெளில க்யூட்டாதான் காமிச்சிட்டிருக்காங்க” என்றார். ‘க்யூட்டான்னா?’ என்று குழப்பமாகவும் க்யூட்டா காட்டக்கூடாதே என்று அதிருப்தியாகவும் தலையாட்டினார் வனிதா.

Bigg Boss Sept 4

நள்ளிரவு 12.45க்கு வனிதா, சாக்‌ஷி, சேரன், ஷெரின் ஆகியோர் இருட்டில் அமர்ந்து ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். வெளியில் யார் யார் எப்படி எப்படி காட்டப்படுகிறார்கள்; அவர்களைப் பற்றி மக்களின் கருத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார் வனிதா. அதற்கு சாக்‌ஷி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“கவின், லாஸ்லியா, சாண்டிலாம் குழப்பமா இருக்கு. ஷெரின் பாஸிட்டிவா இருக்கு. ஷெரின் அடுத்தவங்களை உற்சாகப்படுத்தற மாதிரி விளையாடறதா காட்டப்படுது” என்றார் சாக்‌ஷி.

”பார்த்தியா ஷெரின்” என்று ஷெரினுக்கு விபூதி அடிக்க ஆரம்பித்தார் வனிதா. “அந்த வில்லேஜ் டாஸ்க்ல நீ உண்மையா இருந்தியா?” என்று கேட்க “ஆமாம்!” என்றார் ஷெரின்.

“பொய்யி. வாயத்திறந்தா பொய்யி. இவ யாருக்காகவோ க்ளோஸாகி விட்டுக்கொடுத்து விளையாடறா” என்றார் வனிதா.

Bigg Boss Sept 4

இல்லை என ஷெரின் மறுத்த போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரி வனிதா “ஆமா. ஆனா அத நீ உணரல” என்றார். ப்ப்பா! உலகத்திலேயே இவர் நினைப்பது மட்டுமே சரி! “நான் போட்டிருக்கறது சிகப்பு சட்டை” என்று காட்டினால் கூட “அது ப்ளூ கலர். அதுக்கு சிகப்புனு யாரோ தப்பா பேர் வெச்சுட்டாங்க” என்று சொல்லுவார் போல.

“எனக்கும் தர்ஷனுக்கும் ஒண்ணுமில்ல. சும்மா அதப்பத்திப் பேசாத. நீதான் என்னையும் தர்ஷனையும் பத்தி திரும்பத் திரும்ப பேசி பெரிசு பண்ற. நீதான் இரிடேட் ஆகிட்டே இருக்க” என்று வனிதாவுக்குத் திருப்பிக் கொடுத்தார். பிறகு எழுந்து சென்றார். ஷெரினைத் தொடர்ந்த சாக்‌ஷி, கவின் & பாய்ஸை எதிர்க்க வனிதா, ஷெரின் கூட்டணியின் தயவு தேவை என்பதால் ஷெரினை சமாதானப்படுத்தினார். “வனிதா உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க” என்பதாகப் பேசி சமாளித்தார்.

Bigg Boss Sept 4

நள்ளிரவு 1.45க்கு மோகன் வைத்யா, சாண்டி, சாக்‌ஷி, தர்ஷன் நால்வருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு டாஸ்கில் ஓடும்போது கவின் விழுந்தார் அல்லவா, லாஸ்லியா, சாக்‌ஷி தொடர? அப்போதுகூட கவின் “சாக்‌ஷி தள்ளிவிட்டிருப்பாளோ” என்று சாண்டியிடம் சந்தேகப்பட்டார். அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு “நீ அன்னைக்கு விழுந்த பாரு.. அய்யோ” என்று மோகன் வைத்யா ஆரம்பிக்க சாக்‌ஷி “சாண்டி.. ஒரு விஷயத்தை க்ளியர் பண்றேன். நான் யாரையும் தள்ளி விடல. அப்படிச் சொல்லி சிம்பதி கிரியேட் பண்றாங்களானு தெரியாது. அப்படி சீப் மெண்டாலிட்டி எனக்கில்ல” என்று விளக்கினார்.

“இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ கொசு வருது. சாண்டிண்ணே… தூங்கலாமா” என்றார் கவின். கொழுப்புய்யா உனக்கு!

அதன்பிறகு சாண்டியிடம் பேசிக்கொண்டிருந்தார் கவின். வனிதாவிடம் சாக்‌ஷி “இவன்லாம் வெளில இருந்தா சீண்டக்கூட மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதைக் குறிப்பிட்ட கவின், “அப்படியெல்லாம் சொல்லிட்டு இவ்ளோ சீன் போடறா” என்று கோவமாகச் சொன்னார்.

Bigg Boss Sept 4

அப்பாலாம் வேணாம்… ’சேரன்’ போதும்!

73ம் நாள் ஆரம்பித்தது வீட்டில். வெகுநாட்களுக்குப் பிறகு எல்லாருமாய் கார்டன் ஏரியாவில் ஆடினர். ஷெரினுடன் சமையலுக்கு கவினை வனிதா பணிக்க “அவன் மேல நான் கோவமா இருக்கேன். சண்டை வந்துடும்” என்றார் ஷெரின். ”ஃபேஸ் பண்ணு. ஒதுங்கிப் போனா என்ன அர்த்தம்?” என்று உபதேசித்தார் வனிதா.

அதன்பின் சேரனுக்கு விபூதி அடிக்க வந்தார் வனிதா. ”நான் உங்ககிட்ட பேசினதெல்லாம் சரியா வெளில ரீச் ஆகிருக்கு. அப்பா பொண்ணுனு பேசிக்கறதெல்லாம் உண்மையா இருக்க முடியாது. அவ உங்களை ஒதுக்கறானு தெரிஞ்சும் நீங்க போய்ப் பூசிக்க வேண்டியதில்ல” என்று சொல்ல, மோகன் வைத்யா “ஒவ்வொரு ஏரியாவுலயும் பசங்க உங்களப் பத்திப் பேசறப்ப அவளும் சேர்ந்து சிரிச்சிட்டிருக்கா. அது உண்மையான பாசமா, பொய் தான். அப்பா குப்பால்லாம் வேணாம். சேரன் சாரா உங்களை நினைச்சா போதும். நான் வயசுல பெரியவனா நடந்துகிட்டேன். வெளில போய்ப் பார்த்தா அத்தனையும் நாடகம்னு தெரிஞ்சது. எவ்ளோ மனசு கஷ்டமாச்சுனு தெரியுமா? ச்சீ நாம ஏன் இப்படி இருந்திருக்கோம்னு தோணிச்சு” என்று புலம்பினார்.

Bigg Boss Sept 4

குட்டிச்சுவர் மொமண்ட்: வெளியில் குட்டிச்சுவர் சிகப்பு கேட் ஏரியாவில் தன் கேங்குடன் அமர்ந்திருந்த சாண்டி அபிராமியிடம் “எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அப்படியே வந்திருக்கிறது நீ மட்டும்தான்” என்றார். “நான் உங்ககூட ஜாலி பண்ண வந்திருக்கேன்” என்றார் அபிராமி. ”ரெண்டு பேர் பழிவாங்க வந்திருக்காங்க” என்றார் சாண்டி.

சேரன் ”எல்லாத்துலயும் விவரம் கவின். ரெண்டு பொண்ணுங்க பாதிக்கப்படறாங்க. ஆனா அவன் ஜாலியா இருக்கான். அதுனாலதான் அவனை அனுப்பணும்னு வாரவாரம் சொல்றேன்” என்று மோகன் வைத்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஷெரின் ஃபோகஸா விளையாடணும் என்று சாக்‌ஷி வனிதாவிடம் சொல்ல “அத நீ தீர்மானிக்க முடியாது. நான் ரெண்டு வாரமா டிரை பண்றேன். அவளுக்கு பசங்க இவளை ஏன் சேத்திக்கலனு வருத்தம். நீ ஏன் அதுக்கு வருத்தப்படறனு சொன்னா அவ கேட்க மாட்டீங்கறா. அழறா. இந்தப் பசங்களைலாம் அவளுக்கு எவ்ளோ நாளா தெரியும்? அவளத் திருத்த முடியாது” என்றார் வனிதா. உள்ளே மோகன்வைத்யாவைப் பற்றி “ஆளே மாறிட்டார். முன்ன மாதிரி கலாய்ச்சு விளையாடக்கூடாது” என்று பேசிக்கொண்டிருந்தனர் சாண்டி, கவின், தர்ஷன்.

Bigg Boss Sept 4

மாலை 4 மணி: லக்சரி பட்ஜெட் டாஸ்கில் இன்னும் தீவிரமாக சில ரூல்ஸ் கொடுத்தார் பிக் பாஸ். `எம்பிராய்டரி பேட்ச், லேஸ் ஆகிய ஏதாவதொன்று உங்கள் தலையணையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பிக் பாஸ் அவற்றை ஏற்க மாட்டார்’ என்றார். தவிர ஜெயித்த அணியினர், மோசமாக விளையாடிய ஒருவரை நேரடியாக எவிக்‌ஷனுக்கு அனுப்பலாம் என்றார்.

கன்வேயர் பெல்டில் மூலப்பொருட்களை எடுக்கும்போது தர்ஷனுக்கு அடிபட்டது. எதிர் அணியைச் சேர்ந்த லாஸ்லியா அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் செய்தார். மீண்டும் பொருட்கள் வர, கட்டுப்போட்ட கையோடு தர்ஷனும், நார்மலாக இருந்த முகினும் போட்டி போட்டுப் பொருட்களை எடுத்தனர். போட்டி முடிந்ததும் தர்ஷன் தோளை முகின் தட்டிக்கொடுத்தது நல்ல ஸ்போர்ட்டிவாக இருந்தது.

Bigg Boss Sept 4

நேற்று போலவே லாஸ்லியா தேர்வு செய்துகொண்டிருந்ததை பார்வையிட்டு விட்டு, தான் தேர்வு செய்திருந்ததைப் போய்ப் பார்த்தார் வனிதா. பிறகு பிக் பாஸ் கணக்குக் கேட்டார். டீம் A – 9 மதிப்பெண்களும் டீம் B – 18 மதிப்பெண்களும் பெற்றதாய்ச் சொன்னார். ஆக வனிதா, சேரன், தர்ஷன், ஷெரின் கூட்டணி வெற்றி பெற்றது.

கவின் உம்மென்றிருக்க லாஸ்லியா அவரை நார்மலாக்க முயன்றார். ஆண்களின் பிரதிநிதியான கவின் அவரைக் காயப்படுத்தி (சீரியஸா பேசறப்ப காமெடி பண்ணாத. நானும் காமெடி பண்ணுவேன்) அழ வைத்தார். வெளியில் டிவியில் பார்த்த விஷயத்தை சேரனிடம் போட்டுக்கொடுத்தார் மோகன் வைத்யா.

போட்டி மன்றம்

Bigg Boss Sept 4

அடுத்தது ஒரு பட்டிமன்றம். லக்சரி பட்ஜெட்டில் இருந்த அதே அணிகள். சேரன், வனிதா, ஷெரின், தர்ஷன் ஒரு அணி. சாண்டி, கவின், லாஸ்லியா, முகின் ஒரு அணி.

சிறந்த போட்டியும் சவாலும் என சாண்டி அணியும், தியாகமும் விட்டுக்கொடுத்தலும் என சேரன் அணியும் பேச, விருந்தினர்களாக வந்த மோகன் வைத்யா, சாக்‌ஷி, அபிராமி நடுவர்களாக அமர்ந்தனர்.

Bigg Boss Sept 4

“நாங்க போட்டி போடுவோம். 16 பேருக்குமே திறமை இருக்கு. விட்டுக்கொடுக்கத் தேவையில்லை’, “இல்ல விட்டுக்கொடுக்கலாம்.. நமக்கும் மனசாட்சி இருக்கு’ என்று இரண்டு நாட்களாக போட்டு உருட்டிக் கொண்டிருந்த தேங்காயையே இன்றும் உருட்டினர். மோகன் வைத்யாவின் இரண்டு கரங்களும் ஜால்ராவாக மாறி சேரன், வனிதாவின் பாய்ண்ட்ஸுக்குக் கைதட்டினார். தர்ஷனும் அவர்கள் அணி என்பதால் அவரும் அப்படி ஒரு பாய்ண்டைப் பேச கொன்னக்கோல் மாமாவாகத் தலையாட்டினார்கள் மோகனும் சாக்‌ஷியும்.

எந்தெந்த தலைப்புகள் கொடுத்தால் உள்ளே மனரீதியாக இவர்கள் அடித்துக் கொள்வார்களோ அந்த தலைப்புகளாகக் கொடுத்தார் பிக் பாஸ். கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளிலும் வனிதா க்ரூப்தான் ஜெயித்தது. சாக்‌ஷி உச்சரிப்பை கவின் சரிசெய்ய (தேவையா உனக்கு!) சாக்‌ஷி “கவின், லெட் மி க்ளாரிஃபை ஒன் திங். என்னை சரிசெய்யற தகுதி உனக்குக் கிடையாது’ என்று சொன்னார்.

Bigg Boss Sept 4

உள்ளே வனிதா சமைத்துக்கொண்டிருக்க மோகன்வைத்யா, சாக்‌ஷி சாப்பிட்டுக்க்கொண்டிருந்தார்கள். அப்போது வனிதா பேசுவதை சாண்டி இமிடேட் செய்துகொண்டிருந்ததோடு இன்றைய நாளை முடித்தார் பிக் பாஸ்.

இப்போது முதல் பத்திகளைப் படியுங்கள். சொந்தக்காரர்களில் சிலர் வந்து வீட்டை ரெண்டாக்குவது போல, இந்த மூன்று பேரும் வந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸின் ப்ளான் பக்கா வெற்றி!

Bigg Boss Trivia

ஃப்ரெஞ்சில் பிக் பாஸ், Loft Story என்ற பெயரில் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு சீசன்கள் முடிந்ததும் விமர்சகர்களால் கன்னாபின்னாவென்று எதிர்க்கப்பட, அதன் பிறகு சில வருடங்கள் தொடரவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் விதிமுறைகளை மாற்றி Secret Story என்ற பெயரில் அது தொடர்ந்து ஒளிபரப்பானது.

ஸாரோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

ஏஞ்சல் ஷெரின் vs மகாராணி வனிதா; உபயம்: விஷவேர் சாக்‌ஷி... சந்தோஷமா பிக் பாஸ்?!

Fri Sep 6 , 2019
ராணி மகாராணி வனிதாவிடம் சண்டையிட்ட ஷெரினை வனிதா அழவைத்த மகத்தான நாள் இன்று. பிக் பாஸ் எனும் சகுனி செய்த ப்ளான் படி உள்ளே வந்த வனிதா வந்ததற்கு சம்பவம் ஒன்றை அரங்கேற்றினார். RECAP: நேற்றைக்கு வனிதா, தர்ஷனை வைத்து ஷெரினிடம் வாதம் செய்தார். கிராம டாஸ்கில், அவர் தர்ஷனுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடினார் என்றார். அதை ஷெரின் மறுக்க “நீ முகின் கிட்ட அப்படி நடந்துகிட்டிருந்தா தப்பா தெரியாது” […]
Bigg Boss Sept 6
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!