இன்றைய எபிசோடில் சாண்டியின் எமோஷனலும், லாஸ்லியா ரிக்டோனும் தான் ஸ்பெஷல்.

நன்றி வாசகரே!

நேற்றைய பதிவில் இப்போதுவரை என்று போட்டியாளர்களின் நிலை குறித்து எழுதியிருந்ததற்கு வாசகர் அர்ஜூன் “மூணு பேரை மிஸ் பண்ணிட்டீங்களே ஸாரோ’ என்று கமெண்ட் செய்திருந்தார்.

”ஜாங்கிரி: எல்லோரையும் விட வாக்கு வங்கியை தன் வசம் எப்படி திருப்பலாம், மற்றவர்கள் எந்த ‘தேசம்’ என்று கணித்து ஆடுகிறார். நிறைய எபிசோடுகளை பார்த்து கோச்சிங் எடுத்து வந்த மாதிரி தெரிகிறது.

மீரா: – வேண்டுமென்றே மற்றவர்களை தன் வசம் ட்ரிக்கர் செய்ய வைத்து அனுகூலம் அடைய பார்ப்பது அவரின் மாஸ்டர் பிளான், ஆனால் அவரின் கடந்த கால சரித்திரம் இடை வருகிறது.

மீரா மிதுன்

சாக்ஷி: – சரியான ஸ்ட்ராட்டஜிஸ்ட் (அண்ணா யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட் அல்லவா), ஆனால், அகர்வால் குறுக்கிடுகிறது, சரியாக கணித்து லொஸ்லியாவை டார்கெட் செய்கிறார்.”

இதுதான் அர்ஜூன் சொன்னது. மிகச்சரியான கணிப்பு. இதில் மதுமிதாவின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று இருதினங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன்.

அதேபோல அர்ஜூன், “பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் 40 வயது கடந்த ஆண், பெண் போட்டியாளர்களை தேர்வு செய்ய கூடாது, இம்பாலன்ஸ் தெளிவாக தெரிகிறது” என்றிருக்கிறார்.

இல்லை அர்ஜுன். அதான் சுவாரஸ்யமே. அவர்கள் ‘நாங்கள் அனுபவஸ்தர்கள். மரியாதை வேணும்” என்று நினைப்பார்கள். இளசுகளோடு ஆடி ஓடி விளையாடுவார்கள்; அப்போது ஜாலியாக இருக்கும். ஆனால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முட்டிக்கொள்ளும். ‘நான் வயசுல பெரியவனில்லையா? எனக்கு மரியாதை இல்லையா?’ என்று முனங்குவார்கள். அப்போதுதான் எதும் ட்விஸ்ட் நடக்கும். உண்மையில் உள்ளே பலரின் போக்கையும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் திசைதிருப்புவார்கள்.

எமோஷனல் நாளாகப் போன இன்றைய எபிசோடுக்கு வருவோம்!

பொட்டுவைத்த ஒரு…

சாக்‌ஷியின் பொட்டு நன்றாக இருந்ததாய் முகின் கூறியிருப்பார் போல. அதற்கு கவின் சாக்‌ஷியிடம் பொசசிவ்நஸை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். “அப்பறம் நீ மட்டும் எல்லார்ட்டயும் கடல போடற?: என்று சாக்‌ஷி கேட்டதற்கு “அது வெளையாட்டுக்கு மச்சான். என் கேர்ள் ஃப்ரெண்ட்க்கு என்னென்ன குவாலிட்டி இருக்கணும்னு நான் சொன்னதுல 3,4 உனக்கு மட்டும்தான் மேட்ச் ஆச்சு” என்று வலையை இன்னும் அகலமாக விரித்தார் கவின். “கேர்ள்ஸ் வான்ட் அட்டென்ஷன். இன்னைக்கும் ஹாட்டா டிரெஸ் போட்டுட்டு, பொட்டு வெச்சுக்கப்போறேன்” என்றார். ‘அடச்சிறுக்கி.. இவ அவனுக்கும் மேல இருக்காளேய்யா!” என்றார் பக்கத்துவீட்டு லட்சுமியக்கா!

முகின் சாக்ஷி

கடலை போடுவதில் யுனிவர்சிடி கோல்ட் மெடலிஸ்ட் போல காய்களை நகர்த்துகிறார் கவின். அபிராமி, லாஸ்லியா, ஷெரின், சாக்‌ஷி, ரேஷ்மா என்று எல்லாருக்கும் ஒரு திட்டம் வைத்திருப்பார் போல. சாக்‌ஷி மீது கவினுக்கு பொசசிவ் எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. ஆனால் பொசசிவ் இருப்பதாகக் காட்டிக்கொள்வதை சாக்‌ஷி ரொம்பவுமே ரசிக்கிறார். அதைக் கண்டுகொண்ட கவின், அதற்கேற்ப ஆட்டத்தை மாற்றியிருக்கிறார்.

ரிங்டோன் ப்ளீஸ்..

மார்னிங் ஆக்டிவிட்டியாக சரவணன் கோழி பிடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். ஆக்சுவலி இது கவினுக்கு வந்திருக்க வேண்டும்.

லாஸ்லியா

சாண்டியைச் சீண்டினார் லாஸ்லியா. சாண்டியும் வடிவேலு ஸ்டைலில் ‘பேசறதோட நிப்பாட்டிக்க.. தொடறதோட நிப்பாட்டிக்க… அடிக்கறதோட நிப்பாடிக்க’ என்று செய்தது செம காமெடி! லாஸ்லியா சிரித்துக்கொண்டே இருந்தார். அந்தச் சிரிப்பை, பிக்பாஸின் அஃபீஷியல் பார்ட்னரான ஏர்டெல் ரிங்டோனாக்கலாம்!

ஓட்ஸ் VS பழைய சோறு

காலை டிஃபனாக ரேஷ்மா ‘ஓட்ஸ்’ செய்தார். ஓட்ஸ் தனக்குப் பிடிக்காது, ஒத்துக்காது என்றார் மதுமிதா. உடனே அபிராமி வேண்டுமென்றே “வாவ் ஓட்ஸ்.. ரொம்ப ஹெல்த்தி… எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சில்லறதைத்தனமாக சிண்டுமுடிந்தார்.

மதுமிதா, கேப்டன் மோகன்வைத்யாவிடம் தனக்கு நைட் மிச்சமான சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து அதைக் கொடுத்தால் சாப்பிட்டுக்கொள்வதாகச் சொன்னார். அதை மோகன் வைத்யா, கிச்சனில் இருந்த ரேஷ்மாவிடம் சொல்ல ‘ஓனர்னா ஓரமாப் போடா’ என டீல் செய்தார் ரேஷ்மா. உச்சக்குரலில் “நல்லாருந்தா பாராட்ட மாட்டாங்க. அது வேணும் இதுவேணும்னு கேட்பாங்களாமா? ஆளாளுக்குப் பிடிச்சதையெலாம் சமைக்க முடியாது” என்றார். பக்கத்தில் ‘கேட்டலிஸ்ட்’ வனிதா. நிச்சயம் ரேஷ்மாவின் நடவடிக்கையில் வனிதாவின் தூண்டுதல் இருந்திருக்கும் என நம்மால் ஊகிக்க முடிந்தது.

உடனே கோபப்பட்டு மோகன் வைத்யா “ஸீ…. ஐயம் எ கேப்டன். நான் சொல்றத மீறி நீ இப்படிக் கத்தக்கூடாது. அவ ஒண்ணும் அவளுக்குத் தனியா, வேற ஒரு டிஷ் சமைக்கச் சொல்லல. முந்தின நாள் மிச்சமிருக்கற சாப்பாட்டத்தான் கேட்கறா. முடியலனு சொல்லலாம். நான் ரெக்வெஸ்டா கேட்டப்பறமும், என்னை அவமானப்படுத்தற மாதிரி கத்தற? யு கேன்னாட் டிஸ்ரெஸ்பெக்ட் யுவர் கேப்டன்!” என்று ……. எதுவும் சொல்லவில்லை. பெப்பரக்கே என்று முழித்துக்கொண்டுதான் இருந்தார். எடப்பாடியெல்லாம் தெய்வம்யா!

மோகன் வைத்யா

கவினிடம் சொன்னது போலவே ஹாட் டிரஸ்ஸில் இருந்த சாக்‌ஷி, முகினைக் கைகோர்த்துக்கொண்டு அவரை வைத்து பொட்டுவைத்துக்கொண்டார். கவின் திருட்டுத்தனமாக இதை வெறுப்பது போல பார்வை பார்த்தார். கவின் அருகே வர “செமயா இருக்கு மச்சான்..” என்று சொன்னார். அபிராமியும் சாக்‌ஷியும் கவினைப் பற்றி “அவனுக்கு ஒண்ணுமே தெர்ல, வேஸ்ட் ஃபெல்லோ” என்று கமென்ட் செய்தனர். யாரு.. கவினா?? உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத் தப்பு கண்ணுகளா என்று தோன்றியது.

லாஸ்லியா

லக்சுரி பட்ஜெட்

 

இந்த டாஸ்கின் தொடர்ச்சியாக ஃபாத்திமா, முகின், ரேஷ்மா மூவரும் சாப்பாட்டு ராமன் டாஸ்க்கை செய்தனர். பிறகு கன்ஃபெஷன் ரூமுக்கு சாண்டி அழைக்கப்பட்டார்.

ஆபரேஷன் மீரா!

”எவிக்‌ஷன் லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவரை ஹவுஸ் மேட்ஸ் எல்லாருமாக சேர்ந்து வெளியேற்ற வேண்டும். இது ஒரு ப்ராங்க் டாஸ்க். அதன்படி மீராவை கார்னர் செய்து அவரை வெளியேற்றுவது போல நடிக்க வேண்டும்” என்று டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

ஏற்கெனவே அவரை கார்னர்தான் செய்திருக்கிறார்கள். அதை அஃபீஷியலாகச் செய்ய லைசென்ஸும் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ் என்று தோன்றியது. ‘கல்யாண வீட்லயே கால நீட்டி அழறவன்.. எழவு வீட்ல சும்மாவா இருப்பான்?’ என்று என் பாட்டி சொல்வது ஞாபகம் வந்தது.

மீரா

அதன்படி சாண்டி எவிக்‌ஷனில் இல்லாதவர்களை அழைத்து ‘இது ப்ராங்க். நாம எல்லாரும் மீரா பேரைச் சொல்லணும்’ என்றார். ஆனால் வனிதா, ஷெரின், சாக்‌ஷி, அபிராமி எல்லாருமே சொல்லி வைத்துக்கொண்டு “மதுமிதா பேரைத்தான் சொல்ல வெச்சிருந்தோம்” என்று மதுமிதாவின் குற்றங்களை அடுக்கினர். இந்த வாரம் முழுவதும் ஓட்டுப்போடும் மக்களை Influence செய்யத்தான் வேண்டுமென்றே மதுமிதாவின் குற்றங்களை அடுக்குகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.

இவர்களில் ஃபாத்திமா மட்டும் கொஞ்சம் ஜென்யூனாகவே நடித்தார். “மீரா பாவம்.. அவ ஒரு ஏஞ்சல்.. அவளை யாருமே புரிஞ்சுக்கல” என்றார். “எல்லாரும் மீராவ நாமினேட் பண்றாங்க. நீ இவங்க மத்தில இருக்க வேண்டாம். த வேர்ல்ட் ஈஸ் வெய்ட்டிங் ஃபார் யூ” என்றார். ஃபாத்திமா மீராவின் மனங்குளிரப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சகுனிக்கூட்டணியின் முகங்களில் லாவா பொழிகிற எரிமலை!

ஷெரின் சாக்ஷி

மதுமிதா கவினை நாமினேட் செய்தார். சகுனிக்கூட்டணி ஆட்றா ராமா என்றால் அவர் ஆடுவதை சரிவர கணித்துச் சொன்னார். ஒரு கட்டத்தில் சாண்டி மைக்கில் “குருநாதா… என்ன குருநாதா எங்கெங்கயோ போகுது” என்று பிக்பாஸிடம் புலம்பினார். சாண்டி பிக்பாஸுக்கு வைத்த குருநாதர் பட்டம் சாலப்பொருத்தம்.

பிக்பாஸ் மீராவை அழைத்து எல்லாரிடமும் விடைபெற்றுக்கொள்ளச் சொன்னார். அவரும் சொன்னார். சாண்டி கட்டிப்பிடித்து அழுவது போல லைட்டாக நடித்ததற்கே ‘டோன்ட் க்ரை… டோன்ட் க்ரை’ என்றார் மீரா. பிறகு ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது சாண்டி குறுக்கிட்டு “இது ப்ராங்க்’ என்று முடித்துவிட்டார். இது உண்மையாக இருக்கக்கூடாதா என்று சகுனிக்கூட்டணியின் மனது நினைப்பதை முகம் அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்தது!

மீரா மிதுன்

ஆபரேஷன் சக்ஸஸ்!

அந்த ப்ராங்க் ஷோ மூலம் பிக்பாஸ் என்ன நினைத்தாரோ அது வீட்டுக்குள் நடந்து கொண்டிருந்தது. ஃபாத்திமா பாபு மீராவைப் புகழ்ந்ததை சகுனிக்கூட்டணி ஓப்பனாக திட்டிக்கொண்டிருந்தார்கள். வனிதா நேரடியாகவே ஃபாத்திமா பாபுவிடம் கேட்டார்.

வனிதா: “அவளைப் போய் எப்படி ஏஞ்சல், Goddessனு சொல்றாங்கனே தெர்ல.. ஐம் ஃப்ரீக்கிங் அவுட்!”

ஃபாத்திமா: “உங்களுக்கு ஒரு ஒபினியன் இருக்கறப்ப எனக்கு ஒரு ஒபினியன் ஏன் இருக்கக்கூடாது? க்ரூப் ஒபினியன் எல்லாருக்கும் இருக்கணும்னு அவசியமில்லைடா.”

வனிதா

வனிதா: “சூப்பர். சூப்பர். ரொம்ப சூப்பரா இருந்துச்சு உங்க ஒபினியன்..”

ஃபாத்திமா: “நான் உங்க ஒபினியன கமெண்ட் பண்லியே? நீ என் ஒபினியனை எதுக்கு கமெண்ட் பண்ற வனிதா?”

வனிதா: “எது உங்க ஒபினியன்? Goddess அப்டின்னதா,, வாவ்.. Opinion taken!”

வெளியே மீரா, சேரன், லாஸ்லியா, சாண்டி எல்லாம் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்க வனிதா “வெளில என்ன பேசறாங்கனு போய்ப் பாரு” என்றார் வனிதா. இவர் போன சீசனெல்லாம் எபிசோடெல்லாம் பாத்துட்டுதான் வந்தாரா.. இப்படி எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கறவங்களை மக்களுக்குப் பிடிக்காதுனு தெரியாதா? கமல் சார்… இதைலாம் குறும்படம் போட்டுக்காமிங்களேன்!

வனிதா மீராவை தன்பக்கம் இழுக்க தூண்டில் போட்டார். “மீரா.. உன்னைப் பத்தி தப்பா பேசினவங்கள்லாம் உன்கிட்ட பேரைக் காப்பாத்திக்க சேஃப் கேம் ஆடறாங்க. வெளில போய் எபிசோட்ஸ் பாரு. உனக்குத்தெரியும்” என்றார்.

அடுத்த அட்டாக்… அபிராமி!

அபிராமி

அபிராமியிடம் “என்னை உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் மீரா. அபிராமி சொல்ல ஆரம்பிக்க “அதில்ல… “என்று இடைமறித்தார் மீரா. அபிராமி குரலுயர்த்தினார். “நீங்க எனக்கு மெண்ட்டாரா இருந்ததை மட்டும் ப்ரொஜக்ட் பண்ணிக்க நினைக்கறீங்க” என்றார். “நான் உனக்கு ஹெல்ப் பண்ணி உன்னை க்ரூம் பண்ணி..” என்று மீரா சொல்ல “ஹெல்ப் ஹெல்ப்னு சொல்லாதீங்க” என்று கோபப்பட்டார் அபிராமி.

இதான் சமயம் என்று உட்புகுந்தார் வனிதா. “அதை எங்கயும் மீராவா சொல்லிக்காட்டல. நீதான் சொல்லிட்டே இருக்க” என்று ஒரு கூக்ளியைப் போட்டார். அபிராமி அவுட்.

வனிதா தன்னைக் குறை சொன்னது அபிராமிக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்து சரசரவென நடந்தார். பத்தடி நடந்து திரும்பி நின்று “பேசத் தெரியாம போகல.. அவாய்ட் பண்ணணும்னு போறேன்” என்று சீசனில் இரண்டாவது முறையாக F வேர்டை உபயோகித்தார்.

கமல் சார்.. இதையும் குறும்படத்துக்கு எடுத்து வெச்சுக்கோங்க.. இல்ல.. கெட்ட வார்த்தை பேசிக்க பர்மிஷன் குடுத்துட்டீங்களா?

அபிராமி

அபிராமி ஓவர் ரியாக்‌ஷன் செய்வதை ரேஷ்மா குறிப்பிட்டார். ஷெரின், சாக்‌ஷியை அழைத்து அபிராமியைப் பற்றிப் புறம்பேசினார் வனிதா. இதன்மூலம் சகுனிக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. சாக்‌ஷியும் “இந்த வாரம் நான் நாமினேஷன்ல இருக்கேன். என்னைப் பத்திக் கவலைப்படாம, அடுத்தவாரம் அவளை நாமினேட் பண்ணுவாங்கனு புலம்பறா. ஹவ் செல்ஃபிஷ் பீப்பிள் ஆர்!” என்று புலம்பினார்.

ஒன்றுக்கொன்று சளைக்காத சகுனிக்கூட்டணி, தங்களிடமிருந்து அபிராமியைத் தனிமைப்படுத்தியது.

ஹேப்பி பர்த்டே சாண்டி!

கடைசி செக்மெண்ட்டில் பிக்பாஸ் இன்னொரு ரியல் எமோஷனல் நொடிகளைக் காட்டினார். நேற்று சாண்டி பிறந்தநாள். சாண்டி அவரது குழந்தையின் அழுகையை மிக்ஸிங் செய்து ரிங்டோனாக வைத்திருக்கிறார். அதை ஒலிக்கவிட, சாண்டி அப்போதே எமோஷனல் ஆனார். எல்லாரும் சாண்டிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள்.

சாண்டி

சாண்டி அழுதுகொண்டே இருந்தார். கேக் வந்தது. கேக்குடன், சாண்டியின் மகள் படம் உள்ள பில்லோ. அதைப் பார்த்ததும் அழுகையின் டெசிபல் அதிகரித்தது. அழுதுகொண்டே கேக்கை வெட்டினார். டிஸ்ப்ளேயில் சாண்டியின் மகள் உருவம் வர.. பின்னணியில் ‘கண்ணான கண்ணெ’ ஒலித்தது. அந்தப் பாடலை சும்மா கேட்டாலே எமோஷனல் ஆகும்.. பிக்பாஸ் வீட்டுக்குள் மகளைப் பிரிந்த நிலையில் இருக்கும் ஒரு தகப்பனுக்கு சொல்லவா வேண்டும். அழுது தீர்த்தார் சாண்டி. அத்தனை கலகலப்பாக, ஜாலியாக, கலாய்த்துக்கொண்டிருக்கும் மனிதனுக்குள் இருந்த உணர்ச்சிகளெல்லாம் கண்ணீராகக் கொட்டியது. மதுமிதாவும், லாஸ்லியாவும் சாண்டியைப் பார்த்து கூடுதலாக அழுதுகொண்டிருந்தார்கள்.

’குருநாதா.. குருநாதா..’ என்று எப்போதும் கிண்டலாக / ஜாலியாக பிக்பாஸை அழைத்துக்கொண்டிருக்கு சாண்டி, அழுகை கொஞ்சம் ஓய்ந்ததும் கேமராவைப் பார்த்து “தேங்க்ஸ் சார்!” என்றார்.

வி லவ் யூ சாண்டி!

பிளானிங் அல்ல.. ஆனால் பிளான்தான்!

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டா என்று கேட்கிறவர்களுக்கு இன்று நடந்த ப்ராங்க் டாஸ்கை உதாரணமாகச் சொல்லலாம். மீராவை வெளியே அனுப்ப வேண்டும் என்று ப்ராங்க் நடந்த பின் அபிராமியை வனிதா தலைமையிலான கூட்டணி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஃபோனும் சார்ஜரும்போல ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டிருந்த சாக்‌ஷி – அபிராமிக்குள் மனவிலகல். இந்த மாதிரி ஆட்டத்தைத் திருப்பி சுவாரஸ்யமாக்குவதுதான் பிக்பாஸ் வேலை. எல்லாம் ஸ்மூத்தாவே போய்ட்டிருந்தா அப்பறம் நாமதான் பார்ப்போமா என்ன!

மதுமிதா

Big Boss Trivia

டியர் ஸாரோ,

100 நாட்கள் – 15 பேர்கள் என்பதுதான் வரையறுக்கப்பட்டதா? அதற்கு அதிகமான நாட்களெல்லாம் நடந்ததில்லையா?

அன்புடன்
நாகராஜன்
டாடாபாத்.

 

லாஸ்லியா

டியர் நாகராஜன்

குறைந்த பட்சம் 15 பேர்கள்தான் பெரும்பாலும். எல்லா வகை உணர்ச்சிகள் உடையவர்கள், எல்லா வயதினர் என்ற மிக்ஸிங்தான் அது. நாட்கள் என்றால் பிக்பாஸ் தெலுங்கு 70 நாட்கள்தான் நடந்தது.

நாட்கள் மற்றும் ஆட்களைப் பொறுத்தவரை ஒரு சுவாரஸ்ய சீசன் உண்டு. ஆச்சர்யப்படுவீர்கள். பிக் பிரதர் ஜெர்மனியின் ஐந்தாவது சீசன் எத்தனை நாட்கள் நடந்தது தெரியுமா?

365 நாட்கள். ஆம். ஒருவருடம். 59 ஹவுஸ்மேட்ஸுடன் நடைபெற்றது அந்த சீசன்.

என்ன இருந்தாலும்… வருஷம் பூரா பார்த்துட்டிருந்தாலும் போரடிச்சுரும்ல?

அன்புடன்
ஸாரோ.