23வது நாள். மோகன் வைத்யா, கவின், சாண்டி, மீரா ஆகியோர் இவ்வளவுநாள் நடந்து கொண்டதைப் பற்றிக் கொஞ்சமும், இன்றைய எபிசோடில் அவர்களின் பங்கையும் அலசலாம்.. வாங்க!

மோகன் வைத்யா

இதெல்லாம் தேவையா மோகன் வைத்யா?

எவிக்‌ஷனிலிருந்து தப்பித்துவிட்டதால் தான் செய்யும் செயல்கள் சரி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு நபர் மோகன் வைத்யா. உண்மைத்தன்மைக் குறைவு. ’வயசாகிவிட்டது’ என்பதை ட்ரம்ப் கார்டாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பெண்களை முத்தமிடுவதில் எதேச்சையோ, நிகழ் தருணமோ இல்லை.. வலிந்து முத்தமிடும், தழுவும் தருணங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். பல சமயம் அவை எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறதோ என பார்வையாளர்களை எண்ண வைக்கிறது.. அடுத்து பச்சாதாபம் எனும் ட்ரம்ப் கார்ட். இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு புதிய நாடகம் ஒன்றைத் தொடக்கிவைத்தார். பாத்ரூம் க்ளீன் செய்யும் டீம் என்பதில் ஏதோ தடுக்கிறது இவரை. நைஸாக சாக்‌ஷியிடம் பேசி டீம் மாற்றச் சொல்லிக் கேட்கிறார். சமையல் டீமில் போடச் சொல்கிறார். நேற்று சரவணனுக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டதால் அது வேண்டாம் என்று ‘வெஸல் வாஷிங்’ (பாத்திரம் கழுவறதுதான்…!) டீமில் இருக்க முடியுமா?” என்று கேட்கிறார் சாக்‌ஷி.

மோகன் வைத்யா ரேஷ்மா

 

டபுள் சைடு கோல் மோகன் வைத்யா!

மோகன் வைத்யாவின் முகமூடி கழண்டது இங்கே. ரேஷ்மாவிடம் அவர் பேசும்போது, “நான் சமையல் டீம்லதான் கேட்டேன். சாக்‌ஷிதான் ஏனோ வேணாம்னுட்டா” என்றார். நியாயவானாக இருந்தால், “சரவணன்கூட பிரச்னை வரவேண்டாம்னு சொன்னா” என்று சொல்லலாம் அல்லவா? சொல்லவில்லை. ரேஷ்மா திரும்பக் கேட்டபோதும் “ஏன்னு தெர்ல.. என்று நடித்தார். ஏதோ இவர் ஆசைப்பட்டதைக் கொடுக்காமல் விட்டதுபோல நாடகமாடினார். ஒரு கட்டத்தில் ‘எங்க போட்டாலும் ஓகேதான்’ என்றார். `சேரனே எல்லா வேலையும் செய்யறார் அதான் அங்க பாக்க கஷ்டமா இருக்கு’ என்றார். சில்லித்த்னத்திலும் சில்லித்தனமான காரணம். அவர் ஒருவரே எல்லாம் செய்கிறார் என்றால், இருந்து இவர் பங்கைச் செய்ய வேண்டும் அல்லவா? அதென்ன மொத்தமாக வேண்டாம் என்பது?

சாக்‌ஷி அப்போது அங்குவந்து விளக்க “ஓ.. அப்ப சரி” என்றார் ரேஷ்மா. மோகன் வைத்யா பாத்ரூம் ஏரியாவில் சாக்‌ஷியிடம் “அவ ஏன் தனியா வந்து என்கிட்ட கேட்கறா?” என்று கிசுகிசுத்தார். அதற்கு சாக்‌ஷி, ரேஷ்மாவுக்கு மோகன் வைத்யாமீது ஏதோ முன்பகை என்றார். வெளியில் லாஸ்லியா இருக்க ‘லாஸ்லியா நல்ல பொண்ணு.. ஓ இங்கதான் இருக்கியா’ என்று நடித்தார். சகிக்கவில்லை.

அப்போது அங்கு அபிராமி இருக்க “யாரும் முன்னாடி பேசறதில்லை. எல்லாரும் பின்னாடி பேசறாங்க” என்று ஓவர் ரியாக்ட் செய்தார் சாக்‌ஷி. அவரோடு மோகன் வைத்யாவும் சேர்ந்து கொண்டார். அபிராமி, இது நமக்குத்தான் என்று தெரிந்து கொண்டாலும் அமைதியாக இருந்தார். அப்போது ரேஷ்மா வர, மாட்டிக்கொண்ட மனநிலையில் இருந்தார். ரேஷ்மா என்னாச்சு என்று கேட்க “நீ நேரா என்கிட்டயே கேட்டிருக்கலாமே” என்றார். ரேஷ்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை “உங்ககிட்டதானே கேட்டேன்? அப்பறம் சாக்‌ஷி வந்து விளக்கம் சொன்னா. இதுல என்ன பிரச்னை” என்றார். சரி.. ’சரி.. ஃப்ரெண்ட்ஸ்’ என்று கையைப் பிடித்து கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு, `எனக்கு?’ என்று ரேஷ்மாவிடம் முத்தம் கேட்டார். அபிராமி அதைக் கமெண்ட் அடிக்க, “உனக்கு முத்தம் வேணும்னா கேளு” என்று அவருக்கும் கொடுத்து வாங்கினார். சாண்டி எல்லாவற்றையும் ’நல்லாவா இருக்கு இதெல்லாம்’ என்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.

மோகன் வைத்யா சாக்ஷி ரேஷ்மா

மோகன் வைத்யா … இதெல்லாம் நன்றாக இல்லை அவ்வளவே!

கொஞ்சம் விவரமான ப்ளே பாய்!

கவின், தனது ப்ளேபாய் இமேஜ் வீட்டில் பெண்களால் ரசிக்கப்படுகிறது என்பதால் அதை வெளிப்படையாகவே செய்தார். கமலும் அதற்கேற்ப அவரை, அப்படியானவராகவே கையாண்டார். அவருக்கு அடிப்படையில் இது மக்களாலும் ரசிக்கப்படுகிறது என்ற ஓர் எண்ணம் உண்டு. “பிக்பாஸ் நடத்தற கமலே காதல் மன்னன்னு பேர் வாங்கினவருதான். நாமளும் அப்படி இருப்போம். மக்களுக்குப் பிடிக்கும்” என்று நினைத்திருக்கக்கூடும். ஆரம்பத்தில் அபிராமிக்கும் இவருக்கும் இருந்த ரிலேஷன், தானாகக் கழண்டு கொண்டது. பிறகு சாக்‌ஷி. லாஸ்லியா ஆரம்பத்தில் கவினைக் கண்டுகொள்ளாதவர், பாவம் அவராகவே பேச்சுக் கொடுத்து கொடுத்து கவின் மீது ஒரு சாப்ஃட் கார்னர் லாஸ்லியாவுக்கு வந்துவிட்டது. இப்போது சாக்‌ஷி, லாஸ்லியா என்று இருவரிடமும் – நேரடியாக, காதல் என்றெல்லாம் எதுவும் சொல்லாமல் – ரொமாண்டிக்காகப் பேசுவது, பொஸஸிவாக இருப்பதாகக் காண்பித்துக்கொள்வது என்று – வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

லாஸ்லியா கவின்

நேற்றைக்கு சாக்‌ஷி எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தார். அப்போது கவினுக்கு இரண்டு கொடுத்தார். ஒன்று கவினுக்கு. இன்னொன்று சாக்‌ஷியுடையது. சாக்‌ஷி சாக்லேட் சாப்பிடமாட்டார் என்று அவர் பங்கை கவினிடம் கொடுத்தார்.
அதில் ஒன்றை லாஸ்லியாவுக்குக் கொடுத்தார் கவின். அதை இன்று லாஸ்லியா பிரிக்கும்போது சாக்‌ஷி பார்த்து கவினிடம் கேட்க “உன் சாக்லேட் என்கிட்ட இருக்கு. எனக்குக் குடுத்த சாக்லேட்டை நானும் அவளும் எக்சேஞ்ச் பண்ணிகிட்டோம்” என்றார்.

சாக்‌ஷி “இனிமே என்கிட்ட பேசாத. என் உணர்வுகளோட விளையாடாத!” என்று சொல்லிவிட்டார். லாஸ்லியா அந்த சாக்லேட்டை கவினிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு பாத்ரூம் ஏரியா போனார். கவினும் பின்னாலேயே போய் நின்று கொண்டு அப்பறம் அங்கேயே அமர்ந்து கொண்டார். சாண்டியும், ரேஷ்மாவும் அங்கே வர, லாஸ்லியா வெளியே சென்றார்.

ரேஷ்மா நல்ல ஒரு கமெண்ட் சொன்னார் கவினிடம்: “இதுக்குத்தான் எல்லா இடத்துலயும் வைக்கக்கூடாது. ஒரு இடத்துல வெச்சுட்டு ரிசல்ட்க்கு வெய்ட் பண்ணணும்” என்றார்.

சாண்டிதான் செம!

சாண்டி: “மச்சி.. சாக்லேட்டைத் திருப்பிக்குடுத்துட்டாளா?”

கவின்: ”ஆமா மச்சி..”

சாண்டி: “ப்ச்… சரி எடு.. ஷேர் பண்ணிக்கலாம்”

சாண்டி

சகலகலா சாண்டி

’நீ தொட்டதெல்லாம் பொன்னு ராசா.. இனி இது உன்னோட மண்ணு ராசா’ என்று பாட்டுப் பாடி அனுப்பிவைத்தார்களோ என்னமோ.. இதுவரை இவர் செய்வதெல்லாம் ஜாலியாகவும், சமயோசிதமாகவுமே இருக்கின்றன. இவர் சொன்னால் யாரும் ஹர்ட் ஆவதில்லை என்பதும் ஒரு ப்ளஸ். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்கிறார். சென்ற முறை பிக்பாஸ் பற்றி நிறைய ட்வீட்ஸ் போட்டிருக்கிறார். ஆக, இந்த பிக்பாஸ் விளையாட்டின் சாதக பாதகங்களை அலசி, தெரிந்து தெளிந்தவராக இவர் இருக்கிறார்.

அந்த சாண்டியையும் இன்று ஒரு பிரச்னையில் இழுத்துவிட்டார் மீரா. ’டிக் டிக் டிக்’ – லக்சுரி பட்ஜெட் டாஸ்க். 300 கடிகாரங்கள் ஒரு அறையில் இருக்கும். அவற்றில் இரண்டு கடிகாரங்களில் அலார்ம் அடித்துக்கொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து ஆஃப் செய்ய வேண்டும்.

மோகன் வைத்யா சாண்டி அபிராமி

சாண்டியும் மீராவும் சென்று 18 செகண்டில் இரண்டையும் ஆஃப் செய்தனர். கவின் விளையாட்டாக, ‘சாண்டி தனியாவே போயிருந்திருக்கலாம். நீ போய் தேடி ஓடி 5 செகண்ட் வேஸ்ட் ஆச்சு’ என்று சொன்னார். அது மீராவுக்கு ஹர்ட் ஆக, சில பல உரையாடல்களுக்குப் பிறகு சரவணன் கவினிடம் மீரா வருத்தப்பட்டதைச் சொன்னார்.

கவின், தர்ஷன், சாண்டி, முகின் என்று இளைஞர்களிடம் பாராட்டப்பட வேண்டிய அம்சம், பிரச்னை என்றால் சமாதானப்படுத்த முயல்வது. கவின் மீராவிடம் ஸாரி சொல்லி, ஹைஃபை குடு என்றும் கேட்டு வாங்கிவிட்டுச் சென்றார்.

அதன்பிறகு மீரா, சாக்‌ஷி, ஷெரின், ரேஷ்மா ஆகியோர் அதுபற்றிப் பேச மீரா “அவன் ஸாரி கேட்டுட்டுப் போயிட்டான்” என்று சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. தவிரவும் சாண்டியே எல்லாவற்றுக்கும் கிரெடிட் எடுத்துக் கொள்வதாக அவருக்குப் பட்டிருக்கிறது. சாண்டியிடம் இதை சாக்‌ஷி சொல்ல தையாத் தக்கா என்று எதும் குதிக்கவில்லை சாண்டி.

“ஆமா அவஙக் சொல்றது சரிதான். ரெண்டாவது கடிகாரத்துகிட்ட அவங்கதான் போனாங்க. நான் ஆஃப் மட்டும்தான் பண்ணினேன். இது டீமுக்குக் கெடைச்ச வெற்றிதான்” என்றார். அதை எல்லார்முன்னாடியும் சொல்றியா எனக் கேட்க ஓகே என்றார். அப்படியே சொல்லவும் செய்தார். மீராவும் எழுந்து “நான் ஒண்ணுமே பண்ணாத மாதிரி ஒரு பிம்பம் விழவேண்டாம்னு தான் இதச் சொன்னேன்” என்றார்.

கவின் ஓப்பன் டாக்

கவின் இப்போது பேசினார்: “நான் ஜாலியாதான் பேசினேன். அதுக்கு நீ வருத்தப்பட்டன்னு தெரிஞ்சு உன்கிட்ட ஸாரியும் கேட்டேன். நீ ஹைஃபை கொடுத்து அனுப்ச்ச. நான் குளிக்கப் போய்ட்டேன். இப்ப இதை எல்லார் முன்னாடியும் பேசி எதுக்கு
பெரிசு பண்ற? நான் இப்பவும் சொல்றேன். ஸாரி. நீ ஏத்துக்கறதுன்னா ஏத்துக்க. இல்ல உன்னை ஹர்ட் பண்ண, இந்த வீட்ல எல்லாரையும் ஹர்ட் பண்ணத்தான் என்னை அனுப்பிருக்காங்கனு நெனைச்சுக்க. அப்படியே இருக்கட்டும்” என்றார்.

மீரா

”நான் யாரையும் பாய்ண்ட் அவுட் பண்ல. அப்டியே இருந்தாலும் ஒண்ணு பண்ணிட்டு ஸாரி கேட்டா எப்டி? ஹர்ட் ஆனது ஹர்ட் ஆனதுதானே..” என்று மீரா சொல்ல “அப்ப நீ ஏன் ஸாரி சொன்னத அக்செப்ட் பண்ணின? ஹைஃபை ஏன் கொடுத்த?” என்று கேட்டார் கவின். “உன்னை மன்னிச்சுட்டேன். ஆனா…” என்று மீரா எடுக்க “நீ மன்னிச்சுக்க.. மன்னிக்காம போ.. அங்க ஒண்ணு சொல்லிட்டு இங்க வந்து எல்லார் முன்னாடியும் இன்னொண்ணு ஏன் சொல்ற?” எனக் கேட்டார் கவின்.

“எல்லார் முன்னாடியும் இதப் பேசினா நல்லாருக்கும்னு கேப்டனா சாக்‌ஷி ஃபீல் பண்ணினதால வந்தேன்” என்றார் மீரா. சாக்‌ஷிக்கு ஷாக் ஆனது.

வில்லாதி வில்லி மீரா

மீரா மிதுன் பற்றிய சில விஷயங்களைச் சொல்கிறேன். பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மீரா மிதுனுக்கு 2016ல் `மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் கொடுத்தார்கள். பிறகு உடனேயே அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அவரது Fraudulent Activities – தான் அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்கள். அப்போது ரன்னராக வந்தவர் சனம் ஷெட்டி. மீராவிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த டைட்டில் சனம் ஷெட்டிக்குத்தான் போனது. அந்த சனம் ஷெட்டியும் தர்ஷனும் ஃப்ரெண்ட்ஸ். சனம் ஷெட்டி, தர்ஷன், சாக்‌ஷி, மீரா எல்லாருமே ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுண்டு. இன்னும் சொல்லப் போனால் அந்நிகழ்வில் சனம் ஷெட்டியும், தர்ஷனும் ‘சோடி போட்டுக்கொண்டு’தான் கலந்துகொண்டார்கள். தர்ஷனின் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றித் தெரியாமல் எல்லாம் மீரா ‘அம்மாகிட்ட பேசறியா’ என்று கேட்கவில்லை. முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வதில் மீரா கோல்டு மெடலிஸ்ட்.

அபிராமி ஷெரின்

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் அதுதான் நடக்கிறது. சாக்‌ஷி “நீதானே எல்லாரையும் கூப்டுப் பேசச்சொன்ன?” என்று கேட்டதற்கு “நீதான் வந்து பேசின.. நானா வர்ல” என்கிறார். முட்டாள்தனமாக இருக்கிறது அந்த வாதம். ஒரு கேப்டனாக ‘என்ன நடந்தது’ என்று கேட்க அவர்தானே வந்தாக வேண்டும்? அப்படி பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றால் மீரா “அதைப் பேசித் தீர்த்தாச்சு” என்று சொல்லியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

வெளியில் சாண்டி, கவின் இருவர் முன்னாலும் சாக்‌ஷி இதைத் தெளிவுபடுத்தினார். மீரா, ’எனக்கு எதுவும் புரியல..ஐ டோண்ட் நோ’ என்று ஆஸ்கர் விருதை அன் அப்போஸ்டாக ஜெயிக்கக்கூடிய அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தினார்.

இது இதோடு விடாது. மீராவும், மோகன் வைத்யா இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறினாலும் இன்னொருவரை வைத்து பொழுதை ஓட்டலாம். மீராவெல்லாம் அழுகை (இன்றைக்கும் அழுதார்), ஆர்ப்பாட்டம், பொய், பித்தலாட்டம் என்று பல்கலைக் கலைஞராக இருக்கிறார்.

Bigg Boss Trivia

எவிக்‌ஷன் இல்லாமலோ, தகுந்த காரணம் இன்றியோ போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது. அப்படி வெளியேறினால் பெரிய ஒரு தொகை அபராதமாக நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்திலேயே போடப்பட்டிருக்கும்.