டப்ஸ்மேஷ் மிருணாளினி

டப்ஸ்மேஷ் மூலம் பயங்கர பேமஸ் ஆன மிரு, சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக வந்து கலக்கல் பர்பாமன்ஸ் கொடுத்தார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் போவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

mirunalini

 

சாந்தினி

சித்து ப்ளஸ் 2 ஃபர்ஸ்ட் அட்டெம்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி வைத்தார் சாந்தினி. கடைசியாக இவரை கவண் படத்தில் பார்த்ததாக நினைவு. பிக்பாஸில் எப்போதும் இப்படியாக சில நடிகைகள் வருவதுண்டு. ‘ தட் இவங்கல எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே கேங் ‘ .

Chandhini

 

மதுமிதா

இதே ‘ எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே கேங்கின் அடுத்த நபர் ஜாங்கிரி மதுமிதா. விஸ்வாசம் படத்தில் கூட வெள்ளை முடி சகிதம் இவரைப் பார்த்தோமே.ஆம், OKOK படத்தின் தேனடை இனி எல்லா நாள்களிலும் பிக்பாஸில் ரேசனில் தான் உணவு சாப்பிட வேண்டியதிருக்கும்.

madhumitha

 

விஜே ரம்யா

சமீப காலமாக ஃபிட்னெஸ் ஃபிட்னெஸ் என பறந்து கொண்டு இருக்கும் விஜே ரம்யா தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் இன்னொரு போட்டியாளராம். தண்டால், பஸ்கி எல்லாம் அங்கேயே இருக்கும் என்பதால், விஜே ரம்யாவுக்கு யாதொரு குறையுமில்லை கண்ணா தான் !

VJ ramya

 

லைலா

” இப்படி இப்படி பண்ணி ஏமாத்திட்டாடா ‘ புகழ் கண்ணழகி (இருக்கான்னு எல்லாம் தேட வேணாம் ) லைலா தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் மற்றுமொரு போட்டியாளராம். சமீபத்தில் சினிமா வாய்ப்புகள், ரீ என்ட்ரி தருகிறேன் என்றெல்லாம் மீடியாக்களில் பேட்டி கொடுத்தவர். இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள். சென்ற சீசன்களில் மும்தாஜ், காயத்ரி ரகுராம் வரிசையில் இந்த முறை லைலா. ஆனால், லைலா மும்தாஜா காயத்ரி ரகுராமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

Laila

 

கஸ்தூரி

அட, நம்ம தமிழ்ப்படம் கஸ்தூரி.., 90ஸ் கிட், 80ஸ்கிட் எல்லோருக்கும் வெவ்வேறு விதமாக தெரிந்தவர் கஸ்தூரி. ட்விட்டரிலேயே கஸ்தூரிக்கு Z பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு தினமும் நாலு வாய்க்கா தகராறை காலை உணவாகச் சாப்பிடுபவர். உள்ளே என்ன என்ன செய்ய இருக்கிறாரோ.

kasthuri

பூனம் பஜ்வா

தெனாவட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தது போல், சுந்தர் சி படங்களில் வரிசையாய் இவரைப் பார்த்தாலும், இன்ஸ்டாகிராமத்தில் தான் தற்போதைக்கு வசித்து வருகிறார். இன்ஸ்டாவில் தினமும் பலருக்கு வெல்கம் மெசேஜ், பூனம் பஜ்வாவின் புகைப்படங்கள் தான்.

poonam bajwa

 

கிரிஷ்

அட, நம்ம பாடகர். மஞ்சள் வெயில், ஒரு முகமோ, அடியே கொல்லுதே என ஒரு காலத்தில் வரிசையாக வந்த ஹிட் சாங்ஸ் எல்லாம் கிரிஷ் தான். இந்த முறை உள்ளே நாம் பொன்னம்பலத்தில் குரலில் எல்லாம் பாடல்கள் கேட்கவேண்டியது இல்லை. கிரிஷ் இருக்கிறாராம்!.

Krish

 

விசித்ரா

முத்து படத்துல வடிவேலு, செந்திலுக்கு ஜோடியா வருவாங்களே அவங்களே தான். சில வாரங்களாக ட்விட்டரில் வரிசையாக புகைப்படங்கள் பதிவேற்றிக்கொண்டு இருந்தார். ‘ என்னடா இது ‘ என இல்லாத அறிவில் யோசித்துக்கொண்டு இருந்தால், பிக் பாஸில் வர இருக்கிறாராம். ஓ இதற்குத்தான் ஃபோட்டோ அப்டேட்டாஸா!

Vichithra

 

வட சென்னை சரன்

வட சென்னை படத்தில் , மாமா தனுஷுக்காக அப்பாவையே அடித்து பிரபலமான சரண் தான் பிக்பாஸ் வீட்டின் ஜூனியர் சிட்டிசன். இவர் ஸ்ரீயா இல்லை ஹரிஷ் கல்யாணா என்பதையும் காலமே பதில் சொல்லட்டுமே பாஸ்!

 

vada chennai saran

 

சென்ற முறை ஆனந்த் வைத்தியநாதன் போல்,  இந்த முறை மோகன் வைத்தியநாதன் வர இருக்கிறாராம். அந்நியன் படத்தில் சதாவின் அப்பாவாக வருவாரே அவராம் பாஸ்!. அப்படியே ஒரு இலங்கை மாடல், மலேசிய பாடகர் , விமானப் பணிப்பெண், ‘ சரவணன் மீனாட்சி’ கவின், சான்ஸ் மாஸ்டர் சாண்டி, ரமேஷ் திலக், காலா புகழ் சாக்சி அகர்வால் என ஒரு பட்டியலையே வாசிக்கிறார்கள். என்ன இருந்தாலும், அடுத்த நூறு நாட்களுக்கு பொழுதுபோக்கு கியராண்டி என்பதால், ஜெய் ஹோ சொல்லி உட்காருவோம்.